7 Jul 2016

வருடத்தின் முதல் நாவல் என் நாவில்

ஆனி முடிந்து ஆடி துவங்கும் வேளையில் கிடைக்கும் நாவல் பழங்களின் மீது அலாதியான பேரன்புக் கொண்டவன் நான். அதிலும் நாட்டு நாவல் என்றால் சொல்லவே வேண்டாம். நாளடையில் நாட்டு நாவல் வரத்து குறைந்து வரும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக எளிதில் கிடைப்பதென்பது வரம்.
கடந்த வெள்ளி கிழமை கூட அலுவலக நாவல் மரத்தை அனார்ந்துப் பார்த்து விட்டுத்தான் சென்றேன். ஒரு பழங்கள் கூட விழுவதற்கான அறிகுறிகள் இல்லை.
ஆனால், இன்று காலை அலுவலகம் வந்து எனது அறை ஜென்னலைத் திறந்த பின் பார்த்தால் தரையெங்கும் நாவல் பழங்கள் சிதறிக் கிடக்க, "வீட்டில் அடைத்து வளர்க்கப்படும் குழந்தைகளை மைதானத்தில் இறக்கிவிட்ட பின்பு குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடுவது போல் ஓடிச்சென்று, ஒரு முழு நாவலை எடுத்தேன் இவ்வருடத்திற்கான எனது முதல் நாவலை."
"எதிர்பாராத தருணத்தில் காதலி கொடுத்த நீண்ட முத்தத்தின் சுகத்தை அனுபவித்த உணர்வோடு வாயில் போட்டு, கண்களை மூடியும் பழத்தை வாயினுல் நாவால் சுழற்றியும் மெல்லக் கடித்து அதன் சாற்றை மெதுவாக உறிந்தும் மெதுமெதுவாகத் தொண்டைக் குழியினுள் இறக்கினேன்."
"ஆஹா, என்னவொரு பேரானந்தம்"
அப்படியே தட்டு ஒன்றை எடுத்து வந்து விழுந்துக் கிடந்த அனைத்தையும் எடுத்தால் தட்டு நிரம்புமளவிற்குக் கிடைத்துவிட்டது. அப்படியே, தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்து அலுவலகச் சமையலறையிலிருந்து எடுத்து வந்த உப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு அலுவலக நண்பர்களுக்கு ஆளாளுக்கு எண்ணி நான்கு நான்கு மட்டும் கொடுத்து விட்டு தட்டுடன் எனது மேசையில் வந்தமர்ந்துச் சுவைக்க ஆரம்பிச்சாச்சி. இனி ஆடி மாதம் முடியும் வரை நாவல்பழ விருந்துதான்.

#இனியன்

No comments:

Post a Comment