இதை எழுதும் போது மணி அதிகாலை 3.30 ஏனோ இரவு உறக்கம் வராததால் நீண்ட
நாட்களாக மடிக்கணினியில் என்னால் பார்க்கப்படாமல் அடைப்பட்டுகிடந்த மலையாள
திரைப்படம் “திர்ஷ்யம்” சிறிது நேரம் பார்த்து விட்டு உறங்கலாம் என்று நினைத்த
எனக்கு முதல் காட்சியிலேயே கேரளத்தின் வனப்பும் ஆரவாரமின்றி சிறிய தலை
திருப்புதலின் மூலம் அறிமுகமாகிய கதாநாயகனின் தோற்றமும் இந்த படத்தில் அப்படி என்ன
இருக்கிறது அனைவரும் கொண்டாடுமள்ளவிற்கு என்ற எதிபார்ப்பும் பற்றிக்கொண்டு திரைப்படம்
சென்ற வேகம் மற்றும் அழுத்தமான படைப்பாக்கதால் உறக்கம் மறைந்து உற்ச்சாகம்
பற்றிக்கொண்டது.
பாட புத்தகம் தவிர்த்து மற்ற தரவுகளை ஒருவித போதை தேடலுக்காக இலக்கிய
ஆர்வத்துடன் மற்ற எல்லாதர படிப்பதை பொதுவாக இலக்கிய ஆர்வம் என்று
சொல்லிக்கொண்டிருகிறோம்.ஆனால் புத்தக இலக்கிய ஆர்வத்திற்கு மாறாக மற்றுமொரு
மிகப்பெரிய தேடல் கொண்டதுதான்
திரையிலக்கியம்.பெரும்பாலான மக்கள் விரும்புவதும் கற்றுக்கொள்வதும் திரையிலக்கியத்தில்தான்.அதன் மூலமாகவே ஆட்சி மாற்றம்
வரை உலகம் முழுவதும் அரங்கேறிய வரலாறுகள் நமக்கு தெரிந்ததுதான்.அந்த வகையில் அவ்வாறு
ரசித்து பார்க்கும் திரைப்படங்களை மூலம் தான் கற்றுக்கொண்ட திரையிலக்கியத்தின்
வாயிலாக தன்னுள் வளர்ந்த சிந்தனையறிவை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்றும் கதாபாத்திரத்தில்
மோகன்லால் கனகச்சிதம்.அவர் மற்றுமின்றி மீனா,மீரா,ஹஷிபா,அனு என அனைவரது
கதாபாத்திரமும் சரியான அளவில் அருமையான நடிப்பால் படம் ஒருநிமிடம் கூட சலிப்பு
தட்டாமல் செல்ல உதவியிருக்கிறார்கள்.படத்தில் கதாநாயகனைப் பார்த்து காவல் துறை
அதிகாரி ஒருவர் சொல்கிறார்,”அவன் நான்காம் வகுப்பு வைத்தான்
படித்திருக்கிறான்,இருப்பினும் மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகள்
அனைத்தும் தெரியும் அவையனைத்தும் அவன் பார்க்கும் திரைப்படங்கள் மூலமாக அறிந்து
கொண்டதுதான் அந்த அறிவை வைத்துக்கொண்டுதான் நம்மிடம் போக்கு காட்டிக்கொண்டிருகிறான்
என்று முடியும் அந்த வசனம்”.மற்றுமொரு காட்சியில் “வட்டிக்கடைக்காரன் தங்கள் மகனை
கடத்திக்கொண்டு போய் விட்டார்கள்,அவர்களுக்கு இந்த போலீசும் துணை என்று தவிக்கும்
வயதான பெற்றோருக்கு தன் கண்களை மூடி திரைப்படத்தில் வரும் வசனத்தை நினைவு கூர்ந்து
கோர்ட்டில் ஹேபியஸ் மனு செய்தால் அந்த போலீசே உன்மகனை கண்டுபிடித்து தர
வேண்டுமென்று சொல்லி அவர்களை வழி நடத்துவது போன்ற காட்சியிருக்கும்”.சற்று
நிதானமாக யோசித்து பார்த்தால் நம்முள் எத்தனை பேர் நமது வாழ்க்கையுடன் திரைப்பட
காட்சிகளை ஒப்பிட்டு பார்த்தோ அல்லது இதுபோன்று நம் வாழ்விலும் நடந்து விடாதோ என்ற
ஏக்கப்பட்டிருபோம். பொதுவாக இது போன்ற சமூக நிலைபாட்டையும் எதார்த்தம் பாதியாகவும்
கேள்விச் சிந்தனையாகவும் சிறிதளவு தொட்டுச்செல்லும் திரைப்படங்களை பாருக்கும் போது
வில்லன் மற்றும் கொடுமைப் படுத்தும் கதாபாத்திரங்களாக வருவோர் மீது பார்ப்பவர்களுக்கு அவர்கள் மீது
கோபமும்,வேதனைகளை அனுபவிப்பவர்கள் மீது பரிதாமமும் வந்து விட்டாலே அந்த நடிகர்கள்
வென்று விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் இந்த படத்தில் நடித்த
அனைவரும் அந்த சிறப்பை பெற்றுவிட்டனர் என்றே சொல்லவேண்டும்.இந்நிலை ரசனைதான் திரையிலக்கியத்தின்
வெற்றி என்றும் கூட சொல்லலாம்.இதுபோலவே காட்சியில் கற்றுக்கொள்ளும் அனைத்தும் நம்
மனதில் அழுத்தமான பாதிப்பை மேல்லோங்கும் என்று சொல்கிற திரைப்படமாகவும்
இருக்கிறது.
நடிப்பை விட அதிமுக்கியமாக நாம் பாரட்ட வேண்டியது திரைக்கதையையும்
இயக்கத்தையுமே படம் ஆரம்பித்த முதல் நிமிடம் முதல் இறுதி நிமிடம் வரை எந்த ஒரு
நொடியையும் பார்ப்பவர்கள் வீணாக்கி விட்டாமல் கட்டாயம் பார்த்தேயாக வேண்டிய
கட்டாயத்தை மலையாள படங்களுக்கே உரித்தான ஆரவாரமில்லாத் தன்மையுடம் செம்மையாக
செய்திருக்கிறார் இயக்குனர் “ஜித்து ஜோசப்”. திரைக்கதைக்கு உதாரணமாக இறுதி
காட்சியை சொல்லலாம் அதை விவரித்தால் படம் பார்க்காதவர்களுக்கு படம் பார்க்கும்
ஆர்வம் குறைந்து விடும்.அதனால் வேண்டுமிங்கு.
இந்த படத்தைதான் தற்போது நமது உலகநாயன் “பாபநாசம்” என்ற பெயரில்
நடித்து வருகிறார்.மோகன்லாலின் கதாபத்திரத்திற்கு ஏற்றவராக உலகநாயகன் இருந்தாலும்
தமிழ் படங்களுக்கு உண்டான மசாலா சேர்ப்பும் கதாநாயக ஆதிக்கமும் இல்லாமல் திரைப்படம்
உருவானால் இங்கேயும் பலமான வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் நம்நாட்டில் இதுபோன்ற திரைப்படங்கள் நம்மூரிலும்
எடுக்கிறார்களா?என்ற கேள்வியை முன்வைத்தால் “Perfect Number” ஜப்பானிய
திரைப்படத்தின் தழுவல் என்றே சொல்கிறார்கள் திரையிலக்கியவாதிகள்.பொறுத்திருக்கலாம்
இதுவரை மூன்று தென்னிந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படம் தமிழில் எப்படியிருக்கும்
என்று.மேலும் நம்ம ஊர் திரைப்படங்களை மற்ற நாட்டினர் எப்போது தழுவ போகிறார்கள்
என்ற எதிபார்ப்பு மட்டுமே மேலோங்கி நிற்கிறது.
#இனியன்
No comments:
Post a Comment