சிகாகோ நகரின் தெருவெங்கும் 50 ஆண்டுகாலம் திறிந்து street still
photography முறையின் அந்நகரின் எழில்மிகு வீதிகளையும் விளிம்பு நிலை மக்கள்
மற்றும் உயர்குடிகள் என அனைத்தையும் தனது
அழகியல் சிந்தனையின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த புகைப்படங்களை தன்னகத்தே
உரித்தாக்கி வெளியுலகிற்கு தன்னை சிறிதும் விளம்பரபடுத்திக் கொள்ளாமல் எளிய வாழ்க்கை
வாழ்ந்து,இறுதி காலத்தில் தான் எடுத்த அழகிய புகைப்படங்கள் அனைத்தும்
உரியவர்களிடம் உரிய நேரத்தில் சென்று சேரும் என்று திடமாக நம்பிய பெண்மணியான
விவியன் மாயர் பற்றிய ஆவணப்படம் “Vivin Mariya:Who Tooks Nany’s Pictures?”.
விவியன் மாயர் என்கிற புகைப்பட கலைஞரை தமிழகத்திற்கு முதன்முதலில்
அறிமுகப்படுத்திய ஓவியர் ட்ராஸ்கி மருது அவர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களும் சிறப்பானதொரு
அறிமுகமாக இருந்தது.
2011ம் ஆண்டு மத்தியில் நமக்கு சிறிதும் அறிமுகமாகாத
நாடுகளிலிருக்கும் கலைஞர்களை பற்றி தேடிப்பார்த்துக் கொண்டிருக்கும் போது கிடைத்ததுதான்
விவின் மரியாவுடைய Selfie
எனப்படும் சுயப்பொழிவுப்
புகைப்படங்கள்.அந்த சுயப்பொழிவுகள் தான்
அவர்களைப்பற்றிய தேடுதலை எனக்குள் ஏற்படுத்தியது.அந்த புகைப்படம் எப்படி
இருக்குமென்றால் தெருவில் நடந்து செல்லும் போது ஒரு கடையின் கண்ணாடியின் முன் நின்று
அவர் தன்னைத்தானே அரை பாதி கருப்பு வெள்ளையாக எடுக்கபட்டிருக்கும்.பொதுவாக சில
கலைஞர்களின் சுயப்பொழிவு வகை புகைப்படங்களை பார்த்திருப்போம்,எந்த புகைப்படமும்
இந்த அளவிற்கு சிறப்பானதாகா இருக்குமென்று சொல்ல இயலவில்லை.நான் அவரைப் பற்றி தேட
ஆரம்பித்த போது கிட்டதட்ட 40 புகைப்படங்களுக்கு மேல் பார்க்க நேர்ந்தது அந்த
காலகட்டத்தில்,இந்த ஆவணப்படம் படம் தயாரிப்பு நிலையிலிருந்தது.இந்த
ஆவணப்படத்த்தின் தயாரிப்பு எப்படி ஆரம்பித்தது என்றால் அலென் என்டோப் என்பவர் சிக்காகோ
நகரைப்பற்றிய பழமையான புகைப்படங்களை தேடி செல்லும் போது ஒரு பழைய பொருட்கள்
விற்பனையகத்தில் இருப்பதாக கேள்வியுற்று செல்லும் போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம்
புகைப்படங்கள் கிடைகின்றன.அப்புகப்படங்களை எடுத்தவர் யாரென்று தேட ஆரம்பித்து
விவின் மாயர் தங்கியிருந்த வீட்டிற்கு,அவர் இறந்து எட்டு மாதங்களுக்கு பிறகு செல்ல அவர் அறை முழுவதும் யாரும் உரிமை கோராத
நிலையில் ஒன்றை லட்சம் புகைப்படங்களுக்கான
paper negative மற்றும் அவரே புகைப்படங்களாக மாற்றி,எந்த புகைப்படம் எங்கு எந்த
தேதியில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களையும் குறிப்பிட்டு வைத்திருந்த
நாற்பதாயிரத்திர்க்கும் அதகமான குறிப்பேடுகள் மற்றும் அவரே தனது குரலால் பதிந்து
வைத்திருந்த ஒலிநாடா போன்றவை கிடைக்கப்பெற்றார்.
ஒலிநாடாவில் அவர் சொல்லியிருப்பதாக நான் சில கட்டுரைகளில் வாசித்தது“நான்
புகைப்படங்களை எடுத்துக் கொண்டேதான் இருப்பேன். இவையனைத்தும் எங்கு செல்ல வேண்டுமோ
அங்கு கண்டிப்பாகா சென்று சேரும்”என்று சொல்லியிருப்பார்.அந்த அளவிற்கும் தனது
புகைப்படங்களின் மீதும் தனது கலையின் மீதும் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்.
இந்த படம் கிட்டத்தட்ட விவின் மரியாவின் முழு வாழ்க்கையையும்
எடுத்துரைத்த திரைப்படம் என்று சொல்லலாம்,ஜியூஸ் இனத்தை சேர்ந்த இவர் தனது 16ம்
வயதில் பிரான்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு
குடிப்பெயர்ந்துள்ளார்,அமெரிக்காவில் வீட்டு வேலைகளும் குழந்தைகளை கவனித்துக்
கொல்லும் Nany எனப்படும் வேலைகளை மட்டுமே செய்து வந்துள்ள அவர் தனது சுய கற்றல்
மற்றும் தேடலின் மூலமே அனைத்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.அவரைப்பற்றி அவர்
வேலை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் கூறும்
போது கூட அவர் வீட்டிற்கு வரும் போதே காமிராவை கழுத்தில் மாட்டிக்கொண்டேதான்
வருவாராம்.
விவின் மரியா ஒரு சிறந்த Silent Street Photographer,அவருக்கு அவர்
காமிராவை வைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கும் போது அவருடை அற்புத கண்களுக்கு
எவையெல்லாம் தனித்த உணர்வுகளுடன் தெரிகிறதோ உடனே அவையனைத்தையும் புகைப்படங்களாகியுள்ளார்.அவருடைய
கண்களுக்கென பறந்து விரிந்த ஒருவித சிறப்பு பார்வைத்தன்மையை தன்னகத்தே
வைத்திருந்திருகிறார்.அவர் எடுத்த அனைத்து புகைப்படங்களும் நம்மிடம் ஏதோ ஒன்றை
பேசுவது போலவே இருப்பதை நாம் இந்த திரைப்படத்தில் கண்டிருக்கலாம்.
வீட்டு வேலைகள் மட்டுமே பார்த்து சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த
பணத்திலிருந்து பிற்காலத்தில் தான் பிறந்த பிரான்ஸ் பகுதிகளுக்கும் சைனா,கிழக்கிந்தியா,வியட்நாம்,இந்தோனேசியா
போன்ற நாடுகளுக்கும் சென்று பல புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பன்னிரெண்டு புகைப்படங்கள் மட்டுமே எடுக்கக்கூடிய காமிராவை மட்டுமே
வைத்திருந்திருகிறார்,அதில் paper negative மட்டுமே பயன்படுத்த முடியும்
அவற்றையும் எல்லா இடங்களிலும் மாற்றி விட முடியாது,அதற்கான தனி அறைகளில் மட்டுமே
உபயோகிக்க முடியும்,அதனால் அவர் தினமும் பன்னிரெண்டு புகைப்படங்களுக்கு மேல்
எடுத்ததில்லை.இந்த ஆவணப்படம் சிக்காகோ நகரில் பிரம்மாண்டமாக திரையடப்பட்டு அந்நகர
மக்கள் அனைவரும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது மட்டுமின்றி உலக மக்கள்
அனைவரும் தெரிந்து கொள்ள வைத்துள்ளது.
தற்போது அவரை பற்றிய பலத் தரப்பட்ட ஆய்வுகளும் ஆவணப்படத்தலும் நடைபெற்றுக்
கொண்டுள்ளது.உலக புகைப்பட கலைஞர்கள் மட்டுமின்றி சிகாகோ நகர மக்கள் அனைவரும் அவரை வியந்துக்
கொண்டிருகின்றனர்.என்று ஓவியர் ட்ராஷ்கி மருது அவர்கள் விவியன் மாயர் பற்றிய தனது
அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.மேலும் இத்திரையிடளுக்கு ஓவியர் நடராஜ் மற்றும்
பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் அப்பனசாமி மற்றும் 40க்கும் மேற்பட்ட
நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக தற்காலத்தில் குறிப்பாக இள வயதினரிடம் அதிகம் வளர்ந்து வரும் சுயப்பொழிவு
மோகத்தில் எந்த ஒரு படைப்புத் தன்மையும் இருபதில்லை,ஆனால் விவின் மாயர் எடுத்துள்ள
பெரும்பாலான சுயப்பொழிவு புகைப்படங்களை பார்ப்பவர்களுக்கு பல கதைகளை கூறுகின்றன.அநேகமாக
இக்கால சுயப்பொழிவு புகைப்பட கலைஞர்களுக்கான முன்னோடியே விவின் மாயர் எனலாம்.
http://www.vivianmaier.com/
#இனியன்
No comments:
Post a Comment