28 Apr 2014

கிருஸ்த்துவத்தை விழுங்கிய இந்துமதம்

இந்துத்துவ ஆதிக்க சக்தியினரால் அடிமைப்பட்டு கிடந்த மக்கள் மனதில் மத மாற்றம் ஒன்றே அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழியென்று, அம்மக்களை தன்பால் இழுத்துகொண்ட கிறிஸ்த்துவத்தில் இனைந்தது மக்கள் மட்டுமல்லாது தங்களுடைய முந்திய மதத்தின் அடையாளங்களை சேர்த்தே இனைத்துக் கொண்டுவிட்டனர்.நம்மை சுற்றி நடக்கின்ற மத சடங்குகளையும் நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும் போது இரு மதத்திற்கும் இடையேயான வேற்றுமைகளை விட ஒற்றுமைகளை அதிகம் காண முடிகிறது.

இதற்கு பல உதாரணங்கள்,தாங்கள் மதம் மாறுகிறோம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சுததிரமாக வாழவிரும்பி என்றவர்கள் மதம் மாறிய பின்பும் இந்து மதத்திற்கே உரித்தான சாதீ அடயாளத்தை சுமந்துகொண்டே மதம் மாறியிருகின்றனர் என்பதை கிருஸ்த்துவ –ஆதிதிராவிடர்,கிருஸ்த்துவ-நாடார்,கிருஸ்த்துவ-உடையார் இன்னும் பல சாதிகள் என்று தங்களது முந்தைய மத அடயாளத்தையும் அபத்தத்தையும் இனைத்து கொண்டே மதம் மாறி அங்கேயும் சாதீ இந்துத்துவத்தின்  அடிமைதனத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.அது மட்டுமலாது   திருமணத்திற்கு தங்கள் சாதியில் ஆரம்பித்து சாதகம்,நல்ல நாள்,நேரம்,தாலி கட்டுதல்,இன்னும் பிற சடங்குகளையும் பின்பற்றீயே இங்கு திருமணங்கள் நடந்தேரீய வண்ணம் உள்ளன.இது போன்ற சடங்குகள் மதமாற்றம் நிகழ ஆரம்பித்த காலங்களில் இருந்து பின்பற்ற வந்ததும்,மத மாற்றம் செய்ய துண்டியவர்கள் இந்த அபத்தங்களை எதிர்க்காது மதம் மாறி நமக்கு கூட்டம் சேர்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததனால் இது போன்ற அபத்தங்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்ற வருகின்றன.இவ்வகையான மத மாற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக 1902ம் ஆண்டு அப்போதைய கிருஸ்த்துமத தலைவராகிய போப் அவர்கள் இந்தியாவில் கிறிஸ்த்துவம் விரைவாக வளர்ச்சி பெற்று வருகிறது,அம்மக்கள் அங்குள்ள சாதிய முறைகளையும் சடங்குகளையும் அவ்வாறே பின்பற்றிகொள்ளலாம் என்று கருத்து தெரிவித்து பல எதிர்ப்புகளை சந்தித்தார் என்று செவி வழி செய்திகள் வருகின்றன.அது உண்மையாக இருக்கும் நிலையில் போப்பை எதிர்த்தவர்களின் கருத்து இங்கு வந்து சேராமல் இருந்திருந்ததன் விளைவே இந்த சாதீய சடங்கு முறைகள் இங்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் கூட எண்ணிக்கொள்ளலாம்.
ஆனால் சமீப காலங்களில் இந்து மதத்தில் உள்ளது போல் புற்றீசலாய் கிளம்பியிருக்கும் கிருஸ்த்துவ போலி சாமியார்கள் மற்றும் வெவ்வேறு அமைப்புகள் போன்றவைகள் செய்யும் செயல்கள் கிறிஸ்த்துவத்தில் சுய நமபிக்கையின்மையும் பல மூட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் வெகுவாக வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது சமீபத்தில் நான் பார்த்த பல சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களால்.

“கிருஸ்த்து அழைகிறார்,28.04.14 அம்மாவாசை தின சிறப்பு ஆராதனை பெருங்கூட்டம்,அழைப்பவர்கள் சாது என்று துவங்கி சில பெயர்கள்”

“உங்கள் துயரங்கள் நீங்க சாது.சாம்சன் கிருஸ்த்துவின் பெயரால் நடத்தும் ஆராதனைப் பெரு விழா”

“இங்கு சிறந்த  முறையில் சாதகம் கணித்து தரப்படும் கிருஸ்த்துவர்களுக்கு மட்டும்”

இவ்வாறு பலவற்றை பார்க்கலாம் நமது அன்றாட வாழ்வுகளில்,இவையனைத்தையும் விட முக்கியமான நிகழ்வுகள் பல இருகின்றது இந்து மதத்தில் இருக்கும் போலி (ஆ)சாமியார்கள் செய்வது போல் குறி சொல்லுதல்,பேய்,பில்லி,சூனியம் அகற்றுதல் போன்ற வற்றையும் தன்னுள் சேர்த்துக்கொண்டே வளர்கிறதோ  கிறிஸ்த்துவமும் கிருஸ்துவ சாமீயார்களும் என்று என்ன தோன்றுகிறது.

மேற்கண்ட விளம்பரங்களில் சாது என்ற சொல்லும் சேர்ந்தே வருவது கவனிக்க பட வேண்டிய என்றாகவே தெரிகிறது.மேலும் கிறிஸ்துவர்களேன்று வளர்ந்து வரும் தொலைநோக்கு செயற்கைக்கோள் தொலைகாட்சிகளில் மட்டும் அவர்கள் தோன்றுவதால் மற்ற ஊடக பார்வைகள் அவர்கள் மீது செல்வதில்லையோ என்றும் என்ன தொன்றுகிறது,மற்ற ஊடகங்கள் இவர்கள்  பக்கம் திரும்பினால் அங்கேயும் இந்து மத (ஆ)சாமிகளான சங்கரா சாரியார்கள்,பிரேமானந்தாக்கள்,நித்தியானதாக்கள் போன்ற பல சாதுக்கள் வெளிவருவார்கள் என்பதில் ஐயமில்லை.

இது போன்று பல இந்துத்துவா தத்துவங்களை சேர்ந்தே வளர்ந்து கொண்டு வருவதால்தான் என்னமோ இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்கள் மீது செலுத்தும் வன்முறைகள்,போலி குற்றச்சாட்டுகள் போன்றவை கிருஸ்துவர்களிடம் மிகக்குறைவாகவே ஏற்படுத்தப்படுகிறது என்ற எண்ணம் இயல்பாகவே  மேலெழுகிறது.இந்து மதத்தில் இருப்பது போன்ற சாதீய வேறுபாட்டினால் சக மனிதனை ஒதுக்கும் நிலையம் நமது நாட்டில் பெரும்பாலும் காண இயலுகிறது,இவ்வகையான அபத்தங்களையும் என்றும் தன்னுள் இனைத்தவாரே “இந்துமதம் விழுங்கிய கிறிஸ்த்துவம்” வளர்கிறதோ?தனி இறைசார்பின்மை தேசம் என்று சொல்லிகொண்டிருக்கும் நமது தேசத்தில்.

#இனியன்.

No comments:

Post a Comment