அம்பேத்காரின் 124 பிறந்த நாளை ஒரு மாதம் முழுவதும் கொண்டாடும்
விதமாய் பனுவலில் சமூக நீதி மாதம்-2014 துவங்கியது,துவக்க நாளான 29.03.2014 அன்று
முதல் நிகழ்வாக ஓவியர் நடராஜ் அவர்களின் தமிழக வரலாற்றில் மிகக் கொடுமையான தலித்
வன்முறைகள் அரகேரிய பகுதிகளை நினைவு கூறும் ஓவியங்களும்,அம்பேத்காரின் ஓவியங்களும்
இடம் பெற்ற ஓவியக்கண்காட்சியை பேராசிரியர் மற்றும் வழக்குரைஞர் அய்.இளங்கோவன்
அவர்கள் துவக்கி வைத்த நிகழ்வின் தொடர்ச்சியாக “மரப்பாச்சி” குழுவினரின்
வித்தியாசமான முறையிலான ஒருகிணைக்கப்பட்ட
தொடர் கவிதை வாசிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
அந்நிகழ்வில் வாசிக்கப்பட்ட
ஒவ்வொரு கவிதைகளும் நம் சமூக அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக
அம்பேத்கார்,பெரியார்,மூவலூர் ராமாமிர்த அம்மையார்,கபீர்,என்டுலாரி சுதாகர்
,ரவிதாஸ்,மனோகர் வாகேடா,ஆண்டாள் அம்மாள்,சிதம்பரம்மம்மாள்,சள்ளப்பள்ளி சொருபராணி,வாமன் நிம்பல்கர், சுகிர்தராணி, குஞ்சிதம்,சுபெக்க சுபத்திரா
ஆகியோரின் எழுத்துகளையும்,எண்ணங்களையும் இணைத்து கவிதைகளாக வடிவமைத்து வாசிக்கப்பட்டது
நிகழ்வின் கூடுதல் சிறப்பு.இந்நிகழ்வினை கவனித்த ஒவ்வொருவர் மனத்தையும் பலவாறான சிந்தனை
ஆட்கொண்டிருக்கும் என்பதில் எவ்வித தயக்கமுமில்லை,இவ்வாறான பல சிந்தனைகளை தூண்டும்
விதமாக நிகழ்ந்த இந்த கவிதை வாசிப்பை அரகேற்றிய தோழர்கள் ஸ்ரீஜித்சுந்தரம்,ப்ரேமா
ரேவதி,ஜென்னி,கமல்,ஜீவசுந்தரி இவர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு
தளங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒரே குழுவாக ஒருகினைத்த
“மரப்பாச்சி”குழுவின் ஒருகினைப்பாளர் மங்கை மற்றும் இக்கவிதைகளை தொகுத்த வ.கீதா
அவர்களும் பாராட்ட பட வேண்டியவர்கள்.பனுவல் சார்பாக அக்குழுவினருக்கு சிறப்பு
செய்யப்பட்டது.
அடுத்த நிகழ்வாக பனுவலின் சமூகநீதி மாதம் -2014 துவக்கத்திற்கு தலைமை
தாங்கிய பேராசிரியர் மற்றும் வழக்குரைஞர் அய்.இளங்கோவன் அவர்களின் வசீகரிக்கும்
உரை.அவர் பேச ஆரம்பிக்கும் போதே எனக்கு கோர்வையாக பேச வராது போகிற போக்கில்
நீங்கள் அதை புரிந்து கொள்ளுங்கள் என்று ஆரம்பிக்கும் போதே அனைவருக்கும் ஆர்வம்
பற்றிக்கொண்டது,அவருடைய உரையை தொகுப்பதேன்பதே கடினமான முயற்சியாகத்தான் அமையும்
என்றே என்ன தோன்றியது,இருபினும் அவருடைய பயனுள்ள உரையை இயன்ற அளவு தொகுக்க
முயற்சிதுள்ளேன்.
“நான் எந்த கட்சியையும் சாராதவன்,எந்த ஒரு இயக்கத்தையும்
சாராதவன்,நான் ஒரு அம்பேத்காரிஸ்ட் அது மட்டுமே என்னுடைய அடையாளம்,தெருமுனை
கூட்டங்களில் மட்டுமே பெரும்பாலும் பேசுவது வழக்கம் அதிலிருந்து மாறுபட்ட தளத்தில்
என்னை பேச அழைத்துள்ளீர்கள்,இவ்விடத்தை பார்க்கும் போது சமூக மாற்றம் என்றைக்கும்
இளைஞர்கள் கையிலையே இருந்து வந்துள்ளது என்பதை உணர்த்தும் விதமாக பலர் இங்கு
வந்துள்ளீர்கள்,இதைனை உணரும்போது சிறிது பெருமையாக இருக்கிறது.
நமது இந்தியாவில் இன்றைக்கு இட ஒதுக்கீட்டில் இடம் பெற கூடிய
மாணவர்கள் அவ்வபோது சிலர் என்னிடம் “எனக்கு கட்டாயம் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்
என்று சொல்வார்கள்”,அது எவ்வாறு நம்புகிறாய் என்று கேட்கும் போது அவர்கள்
சொல்கிறார்கள் அதான் கல்லூரிகளின் தகவல் அறிக்கையில் இருகிறதே 18% இட ஒதுக்கீடு
என்று பதில் சொல்கிறார்கள்,அவ்வாறு சொல்பவர்களிடத்தில் அந்த 18% எவ்வாறு வந்தது
என்று கேட்டால் அவர்களுக்கு தெரியாது.
நமது இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 18% சதவீதம்,அந்த இட
ஒதுக்கீட்டை இங்கு கொண்டுவந்தவர் அம்பேத்கார்,இந்திய அரசியலமைப்பு சட்டத்தை
நிறுவிய அந்த மாபெரும் சட்ட வலுனரான அவரை இன்று எவ்வாறு அடையாளப் படுத்துகிறார்கள்
என்றால்,தாழ்த்த பட்ட சமூகத்தின் அரசியல் தலைவராக மட்டுமே,இங்குள்ள அரசியல்
தலைவர்கள் சிலைகளில் கூட அநேக இடங்களில் கூண்டுகளில் சிறைப்பட்டு கொண்டிருக்கும்
ஒரே அரசியல் தலைவர் அம்பேத்கார் மட்டுமே என்பதை ஓவியர் நடராஜ் அவர்கள் இங்கு
வைத்துள்ள ஓவியங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியா என்ற ஒரு முழு நாட்டிருக்குமான சட்ட திட்டங்களை வகுத்த ஒப்பற்ற
மாமேதைத் தலைவருக்கு இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்
என்ற அடையாளமும் அவரது சிலைகளுக்கு கூண்டுகள் இடப்படும் அவலங்கள் மட்டுமே,இவ்வகையான
மதிப்பீடுகளால் அவர் சீரழிவது போதாதென,ஒரு என்னிடம் இளைஞர் அய்யா நீங்கள் அம்பேத்காரின் பற்றாளர் எங்கள்
ஊரில் அவரது பிறந்த நாளிற்கு விழாவெடுகிறோம் அதற்கு நீங்கள் நன்கொடை தர வேண்டும்
என்று கேட்கிறார்,நானும் சரி என்ன விழா எடுக்க போகிறீர்கள் என்று
கேட்கிறேன்,அதற்கு அந்த இளைஞர் அவருக்கு கூழ் ஊற்ற போகிறோம் என்று பதிலளிக்கிறார்,இந்த எண்ணத்தை யார் சொன்னது
என்று கேட்டால் அவ்வூரின் தலைவர் சொன்னதாக தெரிவிக்கிறார் அந்த இளைஞர்,இவ்வாறுதான்
அம்பேத்காரை நம்மக்கள் உருவகப்படுத்திக் கொண்டிருகின்றனர்.
அம்பேத்கார் என்னும் மாமேதை,பேரறிவாளி,சிறந்த படிப்பாளி,பல
நுணுக்கங்கள் தெரிந்தவர் அவர் பேசாத பொருளாதாரம்,சொல்லாத சமத்துவம்,கல்வியியல்
கிடையாது இத்தனை சிறப்பு மிக்க அவரது படைப்புகளோ அல்லது அவரது வார்த்தைகளோ
இந்தியாவின் எந்த ஒரு பல்கலைகழகங்களிலும் பாடங்களாக கிடையாது,அவை எல்லாம் ஏன் என்று
18% இட ஒதுக்கீட்டில் படித்து பணியில் அமர்ந்திருக்கும்
ஆசிரியர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள் என எவருக்கும் தெரிவதில்லை கேள்வியும் கேட்பதில்லை,கணிதம்
எடுக்கும் ஆசிரியனுக்கு வரலாற்றை பற்றியும்,வரலாறு எடுக்கும் ஆசிரியனுக்கு
அடிப்படை உடற்கூறு பற்றியும்,வேதியியல் எடுப்பவனுக்கு இயற்பியல் பற்றியயும்,இயற்பியல்
எடுப்பவனுக்கு வரலாறு பொருளாதாரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இவ்வாறுதான்
நமது கல்விமுறை உள்ளது.
அம்பேத்கார் அவர்கள் இந்த பாகுபாட்டை கலைவதற்கான முறைகளை வகுத்திருந்தார்,ஆனால்
அவற்றை நடைமுறை படுத்த தவறிவிட்டனர் பின்வந்தவர்கள்.1947 இந்தியா சுதந்திரம்
அடைந்த பின்பு வந்த இந்திய அரசியல் முறைகளும்,ஆசிரியர்களும் தான் காரணம்
இந்நிலைக்கு நாம் செல்ல,தங்கள் வகுப்பறைகளிலே சரியான முறையில் பாடங்கள்
சொல்லியிருந்தால் இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்காது,சுதந்திரத்திற்கு முன்பு
ஆசிரியர்கள் வகுப்புகளில் தேசிய உணர்வுகளை தூண்டும் செய்திகளையும் சம்பவங்களையும்
கதைகளையும் சொல்வார்கள் ஆனால் சுதந்திரத்திற்கு பின் எந்த ஆசிரியனும் அவ்வாறு
இல்லை.
இந்தியாவில் பயிலும் பள்ளி மாணவர்களிடம் வருங்காலத்தில் நீங்கள் யாரை
போல் வரவேண்டுமென்று எண்ணுகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில்
அப்துல் கலாம் போலவோ அல்லது அன்னை தெரசா போலவோ என்றுதான் சொல்லுகிறார்கள்.எந்த ஒரு
மாணவனும் என்னுடைய ஆசிரியர் போல் நான் ஒரு ஆசிரியனாக விருபுகிறேன் என்று
சொல்வதில்லை,இந்த குறைபாடு எங்கிருந்து வருகிறது,ஆசிரியர்கள் அவ்வாறு இருப்பதில்லை
என்பதுதான் இங்கு நிசப்த்தமான உண்மையாக இருக்கிறது.நான் பார்த்திருக்கிறேன் அன்னை
தெரசா போல் சேவை மனப்பான்மையுடன் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லித் திரிந்தவர்களில்
பலர் இன்று தெரசாவின் பெயரிலையே கொள்ளையடிக்கும் தனியார்(மம்மிடாடி) பள்ளிகளை
வைத்து நடத்திகொண்டு,குழந்தைகளை விளையாட்டு பள்ளிகளில் சேர்பதற்கு ஒரு லட்சம் வரை வசூலித்து கொண்டு கல்வி வள்ளல் என்ற பெயரை
வாங்கிகொண்டு அனைத்து ஊர்களிலும் திரிகிறார்கள்.
தமிழகத்திலேயே வேலூர் மாவட்டம் லூயிஸ் கல்லூரிதான் பறையர்களுக்கென
துவங்கப்பட்ட கல்லூரி,இந்தியாவில் முதன் முதலில் 1865ம் ஆண்டு அமெரிக்க
கிருஸ்த்துவர்களால் துவங்கப்பட்டது,சாதீயத்தை விட்டு விட்டு கிறிஸ்த்துவர்களாக
மாறினால்,உங்களுக்காக நாங்கள் பள்ளி துவங்குகிறோம் என்று தெரிவித்து அப்போதைய
வடஆர்காடு(இன்றைய வேலூர்) பகுதியில்
அப்பகுதி அப்பொழுது ஆந்திராவின் கடப்பா வரை எல்லை விரியும் அந்த எல்லையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான
158 கிராம பள்ளிகளை கிராமங்கள் தோறும்
துவங்கப்பட்டது,பிறகு படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று கல்லூரியாக
வளர்ந்து 90 சதவீத ஆதிதிராவிட மக்கள் பயிலும் கல்லூரியாக விளங்குகிறது,இதனால்
ஏற்பட்டுள்ள விளைவு வேலூர் மாவட்ட கிருஸ்த்துவ மக்கள் தமிழகத்தின் வேறெந்த
பகுதிக்கு சென்றாலும் அவர்கள் வேலூர் கிருஸ்த்தவர்கள் கண்டிப்பாக பறையனாகத்தான்
இருப்பார்கள் என்று சொல்லுமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. எந்த சாதீய அடையாளத்தை
மறைப்பதற்காக அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்களோ அதே அடையாளம் வேறு விதமாக
உருவகப்படுத்தப்பட்டு அவர்களை இன்னல்களுக்கு இட்டு சென்றுள்ளது.இதாவது பரவாயில்லை
என்று பொறுத்துக்கொண்டு விடலாம் ஏனென்றால் இது வரலாற்றில் ஏற்பட்ட அழுக்குகள்.
இன்றைக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த பிள்ளைகள்
படிக்க கூடிய உதாரணத்திற்கு வேலூர்
கிராமிய பள்ளிகளை சென்று பார்த்தால் இன்னும் மோசமான நிலையில்தான் உள்ளது,அது
என்னவென்று பார்த்தால் அப்பள்ளிகளின் சத்துணவு சமையல் கூடங்கள் கழிவறைக்கு அருகில்
உள்ளன அவ்வூர் மக்கள் அந்த பள்ளி வளாகத்தில்தான் மது அருந்துகின்றனர்,மது
அருந்துவது மட்டுமல்லாது அந்த கழிவுகளை மாணவர்கள் அருந்தக்கூடிய குடிநீர் தொட்டியில்
வீச,அத்தொட்டி பயன்படுத்த முடியாத அளவிற்கு பாழ்பட்டு கிடைகிறது,ஆனால் அதே
பள்ளி வளாகத்தில் 6௦௦௦ கண அடி கொள்ளளவு
கொண்ட குடிநீர் தொட்டி இருக்கிறது ஆனால் அதிலிருந்து பள்ளிக்கு ஒரு குழாய் இணைப்பு
கூட இல்லை ஏனென்று கேட்டால் அது ஊருக்குள் செல்லும் குடிநீர் தொட்டி,இந்த பள்ளிக்கு
குழாய் அமைத்தால் அந்த தண்ணீர் தீட்டாகி விடுமென்று ஊர் கட்டுப்பாட்டால் தான்
குழாய் அமைக்க வில்லை என்று பதில் வருகிறது,அதை கேள்வி பட்டவுடன் போராட்டங்கள்
நடத்தி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்புதான் குழாய்
அமைக்கப்பட்டது,இச்சம்பவம் நடந்தது தற்பொழுதுதான் சிறிய காலத்திற்கு முன்னர்தான்.
நமது நாட்டில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இட
ஒதிக்கீடு முறை உள்ளது இருபினும் அரசாங்க பள்ளிகளில் மட்டுமே என்பது சதவீத
மாணவர்கள் இட ஒதிகீட்டில் பயில்பவர்கள்தான்.ஆனால் அனைத்து பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் 18% சதவிகித இட ஒதுகீட்டை முறையாக எந்த தனியார்
பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்றால்
யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக்
கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கமே இலவசமாக
கல்வி வழங்குவதாக தெரிவித்துள்ளது,அதனால் நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம்
மூலம் கேட்டால் அனைத்து தனியார்
கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் பயில்பவர்கள் எழுபத்தைந்து சதவீதம் பேர்
இடஒதிக்கீடு மாணவர்கள் என்று தகவல் தருகிறார்கள்.என்னவென்று
விசாரித்தால் இரண்டு அல்லது மூன்று முறை பன்னிரெண்டாம் தேர்வு எழுதியவர்கள்
மற்றும் குறைந்த அளவில் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்கள் என அனைவரையும் கல்லூரியில் சேர்க்கப்படுகின்றனர்,அவர்கள்
அனைவருக்கும் எவ்வாறு அரசாங்கம் கட்டணம் செழுத்துகிறது என்று ஆராய்ந்தால் அந்த
கட்டணங்களில் குறிப்பிட்ட சதவிகிதம் ஆள்பவர்கள் கைகளுக்கு செல்கிறது.இந்த
கொள்ளைதான் இங்கு நடந்து கொண்டிருகிறது.இட
ஒதுக்கீட்டில் படித்து இட ஒதுக்கீட்டில் அரசாங்க பள்ளியில் வேலை பார்க்கும்
அனைத்து ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை தனியார்(மம்மிடாடி)பள்ளிகளில்
சேர்ப்பதற்காக தங்கள் வருடாந்திர சேமிப்பிலிருந்து பணம்
எடுதுக்கொண்டிருகின்றனர்,அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கையில்லை இவ்வாறு
இருக்கையில் எவ்வாறு கல்வியில் மேம்பாடு வரும்.இதற்கெல்லாம் காரணம் இட
ஒதுக்கீட்டில் பயனடைந்தோர் அது எவ்வாறு வந்தது,ஏன் வந்தது என்று அறிந்து கொல்லாமல்
இருப்பதும்,ஒருவன் தான் இட ஒதுக்கீட்டில் படிக்கிறேன் என்று சொல்லும் பொது
மற்றவர்கள் அவர்களை இழிவாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்படிருப்பதுதான் காரணம்.
தற்காலத்தில் இவ்வளவு சிக்கல் நிறைந்த தவறுகள் நடப்பதற்கு காரணம்
படித்தவர்கள்தான் அம்பேத்கார் அவர் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு படிப்பில் 18%
இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்ததுதான்,இன்று
நம் சமூகத்தில் அரங்கேறுகின்ற அனைத்து துரோகங்களும் படித்தவர்களால் தான்
நிகழ்கின்றன.இந்த இட ஒதுக்கீட்டில் படித்து வருபவர்கள் தங்களை யாரும்
அடையாளப்படுத்திக் கொள்வதில்லை,உதாரணமாக இந்தியாவில் உள்ள 186 ஐ.ஏ.எஸ்
பணியாளர்களில் 66 பேரும் 234 ஐ.பி.எஸ். பணியாளர்களில் 97 பேரும் பிற்படுத்த
மற்றும் ஆதிதிராவிட வகுப்பை சார்ந்தவர்கள் அவர்களில் யாரும் தங்களை அடையாளப்
படுத்திகொள்வதில்லை,இதை விட முக்கியமான செய்தி என்னவென்றால் ஆங்கிலேய ஆட்சியில்
அதாவது 1900ம் முன்னரே அன்றைய தலித் அமைப்புகள் போராடி ஒரு உரிமையை பெற்றன,அது
என்னவென்றால் இந்திய வருவாய் துறையில் 40% சதவீத இட ஒதுக்கீடு,அதாவது ஒரு உயர்
அதிகாரி உயர் வகுப்பை சேர்ந்தவரேன்றால் அடுத்த நிலையில் இருப்பவர் கண்டிப்பாக பிற்படுத்தப்பட்ட
அல்லது ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் அதே போல்
உயர் நிலையில் ஒரு பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர் இருப்பதாகக் கொண்டால் அடுத்த நிலையில் உள்ளவர் ஒரு
உயர் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்,இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது.அந்த
ஒரு துறையில் மட்டும்தான்,இத்துறையில் நுற்றுக்கு நாற்பது தாசில்தார்கள் பிற்படுத்தபட்டோர் மற்றும் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள்,இருபினும்
அந்த துறையில் யாரும் ஒழுங்கு கிடையாது அனைவரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்களையும்,அவர்கள்
வாங்கிய இட ஒதுக்கீடு வரலாறையும் ஏமாற்றிக்கொண்டு இருகிறார்கள்,அதனால் இன்று என்ன
நடக்கிறது நமது அரசு அலுவலகங்களில் கூட அம்பேத்காரின் புகைபடத்தினை மாட்ட வேண்டுமென்றால் அரசாங்கத்தின் அனுமதி பெற
வேண்டிய நிலை,ஆனால் ஆயுத பூசை கொண்டாட அனுமதி தேவையில்லை அவ்வாறாகத்தான்
இயங்கிக்கொண்டிருகிறது இன்றைய அரசுகள்.
நீதித்துறையில் இன்னும் கொடுமை இருக்கிற நீதி பதிகளில் பதினோரு பேர்
தலித் இனத்தை சேர்ந்தவர்கள் இருபினும் நாங்கள் அவர்களிடம் ஏதாவது தலித் சம்மந்தமான
வழக்குகளை கொண்டு சென்றால் அவர்கள் எடுக்க மாட்டார்கள்,கேட்டால் தலித்திற்கு
ஆதரவாக செயல் படுபவர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்பார்கள் ஆனால்
தலிதிற்கான வழக்குகளில் மிக முக்கியமான தீர்வுகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும்
கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தலித்தல்லாத நீதிபதிகளே,தலித் நீதிபதிகளான பதினோரு
பேரில் 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுபதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.இந்த நாடு
கெட்டு சீரழிவதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் ஆசிரியர்களும் வழக்குரைங்கர்களும்
தான்.
இந்த மனுதர்மம் என்ற ஒன்றை நம்முள் புகுத்திவிட்டு நம்மை ஆட்டி
படைத்துகொண்டிருகிறது.மனு வந்ததிலிருந்து நமது உடலை கூட பிரித்து வைத்து விட்டார்கள்,வீட்டிற்கு
வர வேண்டுமென்றால் வலது காலை எடுத்து வைத்து வர வேண்டுமென்று சொல்கிறான்,ஒருவேளை
வலது காலில் அடிபட்டு விடுகிறது அப்ப என்னா பண்ணுவான்,அதுவாது பரவாயில்லை வலது
கையில் கொடு,இடது கையில் கொடுக்காதே வாங்காதே என்கிறான்,வலக்கை இடக்கை என்று
சொன்னாலாவது பரவாயில்லை சோத்தாங்கை,பீச்சாங்கை என்று சொல்கிறான்,பீச்சாங்கையான
இடதுகை செயல்பட வில்லை என்றால் என்ன ஆவது,எந்த கை நம் உடலை சுத்தம் செய்கிறதோ அந்த
கையில் கொடுக்காதே வலது கையை கொடு வாங்கு என்று சொல்கிறான்,அதே நிலைதான் இந்த
சமூகமும் உள்ளது,இங்கு எவனொருவன் சாக்காடைகளையும் தெருக்களையும் தூய்மை செய்து
தெருக்களை சுத்தம் செய்துகொண்டிருகிறானோ அவனை தீண்ட தகாதவன் என்று சொல்லி ஒதுக்கி
வைக்கிறது மனு.அவர்கள் ஊரை சுத்தம் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் முதலாளியின்
வீட்டிற்குள் செல்ல இயலாது.நமது கிராமங்களில் ஆதிதிராவிட பெண்கள் அனைத்து
வேலைகளையும் செய்வார்கள் விதை விதைப்பது முதல் ஏர் ஓட்டுவது மற்றும்
அண்டைவெட்டுவது(வரப்பு சீர் செய்வது) வரை ஆனால் அவர்கள் பிரசவித்த மூன்றாம் நாள்
வேலைக்கு வந்து விட வேண்டும்,அவர்களது குழந்தைகளை ஆதிக்க வர்கத்தினரின் மாட்டு
தொழுவங்களில் கூட பாதுகாப்பிற்காக வைக்க இயலாது,ஏனென்றால் மாட்டு தொழுவம்
தீட்டாகிவிடும் என்ற காரணமாம்.அந்த குழந்தை வரப்பிலையே வளர்கிறது,அவ்வாறு வளரும்
குழந்தை முதலாளி வரும் வேளையில் வரப்பில் நடந்தால் தாயே அக்குழந்தையை கீழே
தள்ளிவிடும் அவலமான சூழ்நிலையும் நடந்து கொண்டிருகின்றன,ஆனால் அந்த வயலில்
விளையும் அத்தனையும் ஆதிக்க வர்கத்திடம் மட்டுமே போய் சேரும் அவர்கள் சாப்பிடும்
சாப்பாட்டில் தீட்டு இருப்பதில்லை,இவ்வாறு பிறத்தது முதல் அந்நியப்படுத்தப்படும்
சாதீய வர்க்கம் இன்றும் இந்தியாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.இன்று வேறு
விதமாய் மாட்டு தொழுவங்களை பயன்படுத்திக்
கொண்டிருகின்றனர் நம் மக்கள் என்னவென்று கேட்டால் கிருஸ்த்து வருவார் என்று
நம்பிக்கொண்டு வருடம் தவறாமல் வண்ண விளக்குகள் கட்டி அலங்காரம் செய்து
கொண்டிருக்கின்றனர் கிருஸ்த்துவெல்லாம் வரமாட்டார் என்று கூட தெரியாமல்,சரி
கிருஸ்தவர்களாக மாறிய பின்பாது அவர்கள் தங்கள் அடையாளங்களை மறந்தார்களா
என்றால் அதுவுமில்லை,நாடார்
கிருஸ்த்துவன்,எஸ்.சி. கிருஸ்த்துவன் என்று சொல்லிகொள்ளும் நிலைக்குதான் இந்த ஹிந்துத்துவமும்
மனுதர்மமும் கிருஸ்த்துவத்தையும்
சாப்பிட்டுகொண்டுள்ளது.
இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்னவென்றால் ஒரு
ஆண் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது நல்லா சிகப்பான பெண் வேண்டுமென்று
கேட்கும் நிலைக்கு வந்து நிற்கிறது,அதையே ஒரு பெண் எதிர்பார்க்க முடியுமென்றால்
இயலாது,ஏனென்றால் பெண்ணிற்கு அந்த உரிமையில்லை அந்த அளவிற்கு இந்த மனுதர்மம் நம்மை
கூறு போட்டுக்கொண்டிருகிறது. இதுதான் மனுதர்மம் விட்டு சென்றவை.
இவையனைத்தை விடவும் கொடுமையான சங்கதிகள் நாம் அவ்வபோது
கவனிப்பதுதான்,தாழ்த்த பட்ட மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்கும்
எரிப்பதற்கும் சுடுகாடுகள் இல்லை,அப்படியே இருந்தாலும் பிணத்தை கொண்டு செல்வதற்கு
வழியில்லை,அதற்காக ஒரு போராட்டம் தேவைபடுகிறது,நமது கட்சிகளின் உள்ளாட்சி தேர்தல்
அறிக்கைகளில் சுடுகாடு கட்டித்தரப்படும் என்று அறிக்கை தெரிவிக்கும் நிலையையும்
இந்த சாதீய முரண்களையும் கூட மனுதர்மம் உருவாக்கி சென்றதுதான்.
நம் சமூகத்தில் மனுதர்மம் ஏற்படுத்திய வர்ணத்தின் மூலம் பிளவுண்டு
கிடக்கும் சமூகம்,இந்த வர்ண முறை படி வாசிப்பதும் யாசிப்பதும் ஒருவனைதான்
சாரும்,ஒருவன் வியாபாரம் மட்டுமே செய்ய வேண்டும்,மற்றுமொருவன் சண்டை மட்டுமே செய்ய
வேண்டும்,ஒருவன் இவர்கள் அனைவருக்கும் தேவையான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் இப்படியாக
பிரிக்கப்பட்ட நம் சமூகம் சொல்கிறது,கஜினி முகமது வந்தான் கொள்ளையடித்து சென்றான்
என்று,கஜினி வரும் போது ஒரு கூட்டம் வாசித்துக் கொண்டும் யாசித்துகொண்டும்
இருக்கும்,இன்னொரு கூட்டம் வேலையை செய்துகொண்டிருக்கும் இன்னொரு கூட்டம் வியாபாரம்
செய்து கொண்டிருக்கும்,ஒரே ஒரு கூட்டம் மட்டுமே சண்டையிட்டு கொண்டிருக்கும்
வந்தவன் அந்த ஒரு கூட்டத்தை விரைவாக முறியடித்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து
சென்றான்,இவ்வாறு இருந்தால் கஜினி 17 முறையல்ல
பதினெழாயிரம் முறை படையெடுத்து வருவான் வெல்வான்.இவ்வகையான பாகுபாடுகளை வளர்த்து
அன்று முதல் இன்று வரை அதே போல வாழ பழகிய இந்த இனமென்றால் இவ்வாறுதான்
இருப்பார்கள்,இன்றும் மனித மலத்தை சக மனிதனே தன் கைகளால் அப்புறப்படுத்தும் நிலை
இருக்கத்தான் செய்கிறது.இந்த மனுதர்மம் விலங்குகளையும் விட்டு
வைக்கவில்லை,சேரிகளில் ஆண் நாய்களை வளர்க்க கூடாது என்று சட்டமியற்றும் அளவிற்கு
கிராம சாதீய அமைப்புகள் உள்ளன.உன் சாதியை சொல் நான் ஊரை சொல்கிறேன் அல்லது உன்
குலதெய்வத்தை சொல் நான் உன் சாதியையும் ஊரையும் சொல்கிறேன் என்று சொல்லுமளவிற் மனுதர்மம்
ஆட்டி வைத்துக் கொண்டிருகின்றன.
தஞ்சை அருகே கீழ வெண்மணியில் 47 தலித்துகளை ஒரு ஒரே பூட்டிய அறையில் கோபால நாயுடு என்ற நில
ஜாம்பவான்கள் 1968ல் தீயிட்டு கொழுத்தி கொள்கிறான் அவன் உச்ச நீதிமன்றம் வரை
சென்று ஒருவன் 47 பேரை எவ்வாறு கொள்ள முடியும் என்று சொல்லி விடுதலை பெற்று
வருகிறான்.அந்த கீழ வெண்மணி கிராமத்திற்கு அருகிலையே 3 கீ.மீ. தொலைவில் உள்ள
மற்றொரு கிராமத்தில் உள்ள ஒருவர் எங்கள் கல்லூரியில் வந்து சேருகிறார் அவரிடம் கீழ
வெண்மணி சம்பவம் குறித்து கேட்டால் தெரியாது என்கிறார் அந்த அளவிற்கு மட்டுமே நம்
மனிதர்கள் தங்களை சுற்றி நடப்பதை தெரிந்து கொண்டுள்ளனர்.
நமது உணவுகளை கூட தாழ்வாக நினைக்க கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது
இந்து தர்மம்,தானியக்களி என்றால் எதோ சர்க்கரை வியாதிக்கு மருத்துவர் தெரிவிக்கும்
மருத்துவ உணவு என்றாகி விட்டுள்ளது.களி சாப்பிடுவதாக வெளியில் சொன்னால் அவமானம்
என்று என்னும் வகையிலும் மாற்றி அமைத்துள்ளது. முற்காலத்தில் மாட்டிறைச்சி
சாப்பிடும் பழக்கத்தில் நம்மக்களை அதெல்லாம் கூடாது மாடு தெய்வம் என்று நம்மை நம்ப
வைத்து நம்மவர்களின் உணவு பழக்கத்தை மாற்றியுள்ளது மனுதர்மமும் இந்து
தர்மமும்,மாற்றிறைச்சி சாப்பிடும் மேலை நாட்டு மக்கள் தான் அனைத்தையும் கண்டுபிடித்துக்
கொண்டிருக்கின்றனர்,நம்மாட்கள் என்ன செய்கிறார்கள் இட்லியும் தோசையும்
கண்டுபிடித்துக் கொண்டிருகிறார்கள் அதுவும் குஷ்பூ இட்லி சிம்ரன் ஆப்பம் என்று
நடிகைகளின் பெயர்களால்,அதிலும் ஆரம்ப காலத்திலிருந்த தானிய வகைகளான இட்லியை
மழுங்கடித்து விட்டு விடா பிடியாக நின்று கொண்டிருகிறது இந்த இந்து தர்மம்.
கிராமங்களில் தான் இந்த சாதீய முரண் என்றால் பெரு நகரங்களில் வர்க
முரண் என்ற ஒன்று மேலெழுந்து சக மனிதர்களை கொடுமைபடுத்தி வருகிறது,வசதி படைத்தவன்
ஏழ்மை நிலையில் உள்ளவனை மிதிக்கிறான் பணம் இல்லாத ஒரே காரணத்தால் மிதி
படுகிறான்,இந்த முரண்கள் அனைத்திற்குமே அடித்தளமாய் அமைந்தது இந்த சாதீய
வேறுபாடுகளும் இந்து மனு தர்மங்களுமே காரணிகள்.
தற்பொழுது உள்ள போலி அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் மக்களை பற்றிய
கவலைகள் ஏதுமின்றியே உள்ளனர்,இரட்டை வேடம் தரித்து தலித் அரசியலை மட்டுமே செய்து
கொண்டிருக்கிறார்கள்,குறிப்பாக தமிழ் நாட்டில் சாதிகள் இல்லவே இல்லை என்று
மேடைகளில் முழங்கிக்கொண்டு அரசியல் உள்ளே வந்தவர்கள் தங்கள் கட்சியில் சாதீய
அடையளத்துடனே வளர்த்து வந்துள்ளனர்.இது இவ்வாறு இருக்க எழுபது வயதில் ஒருவர்
தலையில் மைபூசி இளைஞர் அணி தலைவராக இருக்கும் அவலமும் இங்குதான் நடந்து
கொண்டிருகிறது.
டெல்லியில் தூக்கு ரத்து என்று தீர்ப்பு வந்தவுடன் மூன்று நாளில்
அனைவரும் விடுதலை என்று சட்டசபையில் தீர்மானம் போடுவார்கள் ஆனால் அதே நேரத்தில்
மதுரையில் ஒரு ஈழத்து ஆசிரியர் தனக்கான உரிமைகளுக்காக போராடினால் உடனடியாக
பணிநீக்கம் செய்வார்கள்,இங்கு ஆள்பவர்களுக்கு தேவையானது நிரந்தர தீர்வு
அல்ல,அவர்களுக்கு தேவை ஓட்டு அரசியல் மற்றும் சாதிய அரசியல் மட்டுமே, டெஸ்மா
சட்டம் பாயிந்து அரசு ஊழியர்கள் வேலையிழந்து சிறையில் இருந்தவர்களில் நானும்
ஒருவன் நான் உள்ளே இருந்த காலத்தில் ஒரு
முக்கிய அரசியல் தலைவர் என்று சொல்லி கொல்லும் ஒருவரும் தடா சட்டத்தில் கைதாகி அதே
சிறையில் உயர் வகுப்பில் இருந்தார்,உயர் வகுபென்றால் சாதாரணம் இல்லை பெரிய
அறை,அவருக்கு பணிவிடை செய்வதற்கு இரண்டு ஆட்கள்,வருவோர் அமர்வதற்கு இருக்கைகள் என
சகல வசதிக்களுமுண்டு,அவவ்ர் சிறை உணவை கூட உட்கொள்ள மாட்டார்,அவருக்கு அவரது
கட்சியின் மாவட்ட செயலர் இல்லத்திலிருந்து உணவு வந்து விடும் அவ்வளவு சொகுசான
வாழ்க்கை ஒரு நாள் நான் அவரை சந்திக்க சென்றேன் அவர் பகவத் கீதை புத்தகம் வாசித்து
கொண்டிருந்தார்,அதே சிறையில் தான் சாந்தன்
முருகன் பேரறிவாளன் ஆகியோர் இருந்தனர்,அவர்கள் அனைவரும் சிறை பள்ளியில்
கணினி வகுபிற்கு வருவதாக கேள்விப்பட்டு நானும் அவர்களை சந்திப்பதற்காக அங்கு
சென்றேன்,அவர்களிடம் நான் கேட்டபோதுதான் தெரிந்தது அந்த அரசியல் தலைவர் இவர்களை
ஒருமுறை கூட பார்க்கவில்லை என்று,மீண்டும் அந்த அரசியல் பிரமுகரிடம் நான் கேட்ட
போது நான் அவர்களை சந்தித்தால் என் பதவிக்கு பிரச்சனை வந்து விடும் அதனால் நான்
அவர்களை சந்திக்க இயலாது என்று கூறிவிட்டார்.
இடதுசாரிகளை சேர்ந்த ஒரு தலைவர் தொழிலாளர்கள் மற்றும், அடித்தட்டு மக்கள்
நலன் காக்க போராடி அரசியலுக்கு வந்தவர் அம்மக்களுக்காக மட்டுமே போராடிக்
கொண்டிருகிறோம் என்று இன்றும் பேசிக்கொண்டு திரிபவர்,தன் மகனுக்கு சென்னை
பல்கலைகழக பதிவாளர் பதவியை வாங்கியுள்ளார்.ஒரு காலத்தில் மக்கள் போராட்டத்திற்காக
மக்களிடம் பெற்ற தொகையை நன்கொடையாக பெற்ற தொகையை தேனீர் கூட அருந்தாமல் அப்படியே
கொண்டுவந்து கட்சியிடம் சேர்த்த தலைவர்கள் இருந்த அக்கட்சியின் கட்சி அலுவலங்கள்
அனைத்தும் குளிர் சாதன பேட்டிகள் வைத்து கொண்டு சொகுசான வாழ்க்கை நடத்தி வருகின்றன
நமது இடதுசாரி அமைப்புகள்,இந்த அளவிற்குதான் நமது அரசியல் உள்ளது.
இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் அவ்வபோது ஒருசில பிரட்சனைகளை வைத்து
கொண்டு தற்காலிக தீர்வுகளுக்காக மட்டுமே போராட்டங்கள் செய்து
கொண்டிருகின்றன,மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற நடைமுறை பிரச்சனைக்காக எதற்காவது
ஒரு கட்சி போராட்டம் செய்து நிரந்தர தீர்வுககள் வாங்கி கொண்டுள்ளனவா என்றால் இல்லை என்ற பதில் தான் வருகின்றன.ஏன்
இவ்வகை போராட்டங்கள் என்று கேட்டால் தேசத்திற்காக என்று பதில் சொல்கிறார்கள்.
அவர்களிடம் தேதம் என்பது எது?கன்னிகளா?நிலங்களா?அல்லது தண்ணீரா? கன்னிகள்தான்
தேசம் என்றால் எதற்கு இத்தனை கற்பழிப்புகள் பாலியல் வன்முறைகள்,நிலம்தான் என்றால்
எதற்கு மாநிலத்திற்கு மாநிலம் எல்லை கோடுகள்,தண்ணீர்தான் என்றால் ஒரு
மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு தண்ணீர் தருவதில் ஏன் இந்த சிக்கல்கள்
முரண்கள்,ஆனால் உண்மையில் தேசம் என்பது என்ன?மனிதமும் மனித நேயமுமே.சக மனிதனை
மனிதனாக மதிக்கும் எண்ணத்தை வளர்ந்து கொண்டால் எவ்வகை போராட்டத்திற்கு வேலை
இல்லாமல் சென்று விடுமே.ஆனால் இங்கு மனித நேயத்திற்காக போராட்டம் நடத்துகிறவர்கள்
மீதும் மனிதமல்லாத செயல்களே நடைமுறை படுத்தப்படுகிறது.
பகத்சிங் கூரிய வார்த்தைகளை சமீபத்தில் படிக்க நேர்ந்தது,அதில் அவர்
சொல்கிறார் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் ஆனால் நாம் வெள்ளையர்களிடமிருந்து
சுதந்திரம் பெற்று நமது கொள்ளையர்களிடம் கொடுக்க போகிறோம் என்று
சொல்கிறார்,அவ்வாறுதானே நடந்து கொண்டிருகிறது.நமது ஜனநாயகம் மனிதமற்ற
கொல்லையர்கள்தானே நம்மை ஆட்சி செய்து கொண்டிருகின்றனர். இன்றைக்கு தலைவர்கள் என்று
சொல்லிகொண்டிருப்பவர்கள் அனைவரும் ஓட்டு பொருக்கிகளாகவும்,தங்களுடைய வீடு
தங்களுடைய நிலம் தங்களுடைய குடும்பம்,தங்களுடைய சொந்தபந்தம் என்று வாழ்ந்து கொண்டு
உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை திருடுபவர்காகவும்,நாட்டின் வளத்தை சுரண்டக்
கூடியவர்களாகவும் தான் இருகிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டில்
படித்து விட்டு இட ஒதுக்கீட்டில் வேலை பார்ப்பவர்களாகட்டும் அல்லது பொதுவில்
வந்தவர்களாகட்டும் எவருமே மக்களைப் பற்றியோ? மனிதம் பற்றியோ?மனித நேயம் பற்றியோ?பேசுவதுமில்லை,சிந்திப்பதுமில்லை,ஆனால்
இங்கு வந்திருக்கும் நீங்கள் அனைவரும் நல்லா சிந்தனை திறன் உள்ளவர்கள் மனிதம்
பற்றி பேசக்கூடியவர்கள் உங்களை பார்க்கும் போது மனது மகிழ்ச்சி அடைகிறது.
அம்பேத்கார் சொல்கிறார் யார் ஒருவன் தனது
படிப்பு,பணம்,வசதி,அறிவு,உழைப்பை ஒடுக்க படும் மக்கள் சமூகத்திற்காக பயன்
படுத்துகிறார்களோ அவவ்ர்கள் அனைவரும் போற்றத்தக்கவர்கள்,ஜனநாயகம் உரிமையை
ஏற்றுக்கொள்ளாத நாடு இந்தியா,அந்த ஜனநாயகத்தை எப்பொழுது ஏற்றுக்கொண்டு நாம் வாழ
பழகுகிறோமோ அன்றுதான் நாம் அம்பேத்கார் அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் செய்யும்
மிகப்பெரிய தொண்டு.இந்தியா என்ற நாடு என்று சீராகுமென்றால் சாதியம் அழிந்து
சமத்துவம் என்று பேனப்படுகிறதோ அன்றுதான் நம்நாடு உண்மையான வளர்ச்சியடையும் என்று
சொல்லி தனது நீண்ட உரையை நிறைவு செய்தார் பேராசிரியர்.”
இவ்வளவு சிறந்த நெகிழ்ச்சியான உரையை தந்த பேராசிரியர் மற்றும்
வழக்குரைஞர் அய்.இளங்கோவன் அவர்களை பற்றி இங்கு கண்டிப்பாக கூர வேண்டும்,வேலூர்
மாவட்டம் லூயிஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக 36 ஆண்டுகாலம்
பணியாற்றியவர்,தமிழக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்தினாளிகளுக்கான 3% இட
ஒதுக்கீடை நீதிமன்றங்களின் வாயிலாக பெற்றுத்தந்தவர்,மிகச்சிறந்த
சிந்தனைவாதி,மேலும் மிகச்சிறந்த எழுத்தாளர்களாக கவனிக்கப்படும் புனித
பாண்டியன்,யாழன் ஆதி,அழகிய பெரியவன் போன்றோர் இவரது மாணவர்கள் என்ற சிறப்பு
பெற்றவர்,மிகச்சிறந்த களப்போராளி.
இது போன்ற களப்போராளிகள் மற்றும் சிந்தனை வாதிகளால்தான் இன்றும்
சிறிதேனும் ஒடுக்கப்படும் மனிதர்களின் வாழ்வாதாரம் சீராகி வருகிறது என்பது எனது
எண்ணம் .
இனியன்
No comments:
Post a Comment