17 Mar 2014

மனத்தின் இருவகை

55 வயதுக்கு மேல் உள்ள இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்


பெண்1: முனுமாசத்துக்கு முன்னாடி உன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணுனீங்க,போனமாசம் பையனுக்கு பண்ணுனீங்க மருமகனும் மருமகளும் எப்படியிருக்காங்க.

பெண்2:
 மருமகன் சொக்க தங்கம் என் பொண்ணு போடுற கோட்டை தாண்டுரதில்லை,அவரோட வீட்டுலிருந்து தனியா போறத்துக்கு சம்மதிசிட்டாராம் ,ஆனா என் மருமகள் இருக்காளே ராட்சசி,சண்டாளி வந்த நாலேருந்து என் பையன் கிட்ட என்னத்த சொல்லுறாலோ தெரியல என் பையன் என்னை மதிக்கவே மாட்டேங்கிறான்.தனியா போயிடுவானொன்னு பயமா இருக்கு.

பெண்1:சண்டாளி அப்படியா பண்ணுறா பேசாம அவல தளி வச்சிடு.

பெண்2:இப்பதானே ஒரு மாசம் ஆகுது அதுக்குள்ள எப்படினுந்தான் பார்கிறேன்.

பெண்1:கொஞ்ச நாளைக்கு தள்ளி வட்சாதான் புத்திவரும் பார்த்ததுக்கே,உன்னைய மாமியார பெத்ததுகே இப்படி ஆடுறாலே,அந்த நாடகத்துல வரமாதிரி மாமியார் மாதிரியெல்லாம் மாட்டுனா என்ன பண்ணுவாளாம்.

பெண்2: நானும் அப்படி மாற வேண்டியது தான் பேசாம,அப்பத்தான் புத்திவரும் அவளுக்கெல்லாம்.

பெண்1:உன் மகளோட மாமியார் தனியா போறத்துக்கு ஒத்துக்கிட்டங்களா?

பெண்2: அது எப்படி ஒத்துக்காம இருக்க முடியும்,என் பொண்ணுகிட்ட எல்லாத்தையும் சொல்லிதானே அனுப்பினேன்.

பெண்1:அது சரி உன்னை யாரவது ஜெயிக்க முடியுமா?......

பெண்2: புன்னகை பூக்க 

பேச்சி முடிவுற்றது.

28 
வயதையொத்த இரண்டு பெண்கள் பேசிகிறாங்க 

பெண் 1:அப்பாடி ஒரு வழியா அந்த பொம்பள ஊருக்கு போய்டுச்சி.

பெண்
 2:யார சொல்லுற ?

பெண் 1: யார சொல்லுவேன் எல்லாம் என் மாமியார் கொரங்கத்தான்.

பெண்
 2: ஏன் வேலைக்கு போய்டிருந்தாங்களே?

பெண் 1: அதான் பேங்க் 2 நாள் ஸ்ட்ரைக் நடந்துசில அத்தோட சேர்த்து இது மெடிக்கல் லீவ் போட்டு போயிருக்கு ஒரு 15 நாள் நிம்மதியா இருக்கலாம்.இல்லாட்டி தினமும் கார எடுத்துகிட்டு வா டாக்டர் கிட்ட போகணும் கோவிலுக்கு போகணுமுன்னு ஒரே தொல்ல.நேத்தி கூட பாருஅது வீட்டுலேருந்து கோயம்பேடு போறத்துக்கு நாங்க எங்க வீடுலெருந்து கார்ல பொய் விட்டுட்டு வந்தோம்,ஏன் மேனஜர் வேலைதான பார்க்குது ஒரு ஆட்டோ எடுத்துகிட்டு போனா என்ன.எதுக்கெடுத்தாலும் எங்கள கூபிட்டுகிட்டு சனியன் ஒரு 2 வாரத்துக்கு அது தொல்ல இல்லாம இருக்கலாம்.

பெண்
 2:எங்க போயிருக்கு உன் மாமியார்?(இவ்விடம் இந்த பெண்ணும் அந்த பெண்ணின் மாமியாருக்கு மரியாதை குறைக்க ஆரம்பித்து விட்டாள்)

பெண்
 1:எங்க போகும் அது பெத்த குரகுங்கு என் நாத்தனார்
வீட்டுக்குத்தான்,பேசாம அது அந்த பக்கம் வேலைய மாத்திக்கிட்டு போக வேண்டியதுதானே,ஆயும் மகளும் சேர்ந்து கும்மியடிசிக்கட்டும்,நாம நிம்மதியா இருந்துக்கலாம்.ஆமா உன் மாமியார் என்ன சொல்லுது?

பெண் 2:இருக்கு இருக்கு ஏதோ குழந்தைகள பார்த்துக்க வர சொன்னா அதுக்கு இங்க வந்து ரொம்ப துளிர்விட்டு போச்சி.ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போறப்பெல்லாம் டிவி தான் ஓடுது,நல்லா குழந்தையை மடியில போட்டுக்கிட்டு ஒய்யாரமா செவுத்துல சாஞ்சிகிட்டு கால நீட்டிகிட்டு உட்காதிருக்குரத பார்க்கவே அவ்வளவு எரிச்சலா வரும்.இங்கேருந்து பொய் நான் தான் எல்லா வேலையையும் பார்க்கணும்.என்ன நான் போறத்துக்கு முன்னாடி வீட்ட கூட்டிட்டு பாத்திரம் மட்டும் வெலக்கி வச்சிருக்கும் குழந்தைங்க துணிய துவச்சி வச்சிருக்கும்.மத்தபடி நான் போய்தான் எல்லா வேலையையும் நான்தான் பார்க்கணும்.அது உட்காந்திருக்குரப்ப பார்க்கணுமே அந்த கால அப்படியே வெட்டி போட்டுரலாமுன்னு தோணும்.
பெண்
 1:உனக்காவது பரவாயில்ல ஒரு சில வேலையாவது முடிச்சி வச்சிருக்கு எனக்கு யாரு இருக்கா அந்த வேலையெல்லாம் நான்தான் செய்யணும் என் மாமியார் கிட்ட வேலைய விட சொன்னா மாட்டேங்குது,சரி அது வீட்டுல இருக்குற வேல கார அம்மாவ இங்கையும் வந்து வேல பார்க்க சொல்லுனு சொன்னாலும் அதுவும் முடியாதுன்னு சொல்லுது,அதே பொம்பள இங்க வந்து வேல பார்த்தா எங்க அதையே காசுகுடுக்க சொல்லிடுவோமொனு தான் வேண்டானுகுது அது எப்பேர்பட்ட ஆளு தெரியுமா?

பெண் 2:அதான் சம்பாதிக்குதுல கொடுக்க சொல்ல வேண்டியதுதானே என் மாமியார் மாதிரி வெட்டியா இருந்தா பரவாயில்லை.

பெண் 1:இதுங்க எல்லாம் எப்பதான் போய் தொலையுங்கனு தெரியல.

பெண்
 2:ஆமா ஆமா போய் தொலஞ்சா நல்லாத்தான் இருக்கும்.

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகரித்து
,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து வரும் இந்த சம காலத்தில் காலத்திலும் சக பெண்களை அவர்களுக்கான உரிமை உணர்வுகளை மதிக்க தெரியாத இது போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆண்களிடம் பெண்ணிய கருத்து மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றி பேசுவதற்கு முன்னால் நாம் அனைவரும் முதலில் செய்ய வேண்டியது இதுபோன்ற மனநிலையில் இருக்கும் பெண்களிடம் தான் பெண்ணிய கருத்துகளை எடுத்து செல்ல வேண்டும் போல.....

No comments:

Post a Comment