5 May 2014

தாயிக்கு பின் தாரமாகவும் தந்தையுமானவள்

"தாய்க்கு பின் தாரம்" என்ற வர்ணனையை காலம்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது,ஆனால் "தந்தைக்கு பின்னும் தாரம்" என்பதை ஏனோ நம் மக்கள் சொல்ல விருப்பப்படுவதில்லை.

இதில் ஒழிந்திருக்கும் உளவியல் என்னவென்றால் தாய்யை போற்றுதல் என்று உயர்த்தி உயர்த்தியே நம் தாய் என்ற பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போலவே தாரத்தையும் அடிமை படுத்த நினைக்கும் ஆணாதிக்க மன உளவியல் அரசியலே என்று உணர முடிகிறது.


பெண்களை அடிமையாக வைத்திருந்தால் ஆண்கள் சுதந்திரமாக இருந்து விடலாம் என்ற மனப்போக்கைதானே "தாய்க்கு பின் தாரம்" என்று செயல் பட துவங்கியிருப்பார்களோ?என்று உணர தோன்றுகிறது...


மனைவியை இழந்த ஒரு ஆண் மறுமணம் செய்யாமல் தன் குழந்தைகளை வளர்த்தால் அவனை "தாயுமானவன்" என்று கொண்டாடும் நம் சமூகம்,கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளை வளர்த்தால் அவளை "தந்தையுமானவள்" என்று சொல்வதில்லை.

இங்கு தந்தையுமானவளாக இருப்பவர்களை இன்றைய சமூக சூழலிலும் நம் ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கப்படும் பார்வையும் வைக்கப்படும் விமர்சனகளும் தந்தையுமானவர்களை கூனச்செய்து புறம் தள்ளுகிறது. 



ஒருவேளை புராணக்கதைகளில் சிவபெருமான் என்ற கடவுள் கதாபாத்திரம் "தாயுமானவன்"என்ற உருவகத்தொடு இப்பூலோகம் வந்து அனைவரையும் காத்தருளினார் என்று சொல்வதனால் அதை மட்டும் வைத்துகொண்டு கொண்டாடுகின்றனரோ?,ஆனால் உலகை தாயாக இருந்து காக்கும் பராசக்தி என்று சிவனின் துனையாளாகா உருவகப்படுத்தும் அதே புராணங்களும்,ஏன் நமது பாரதியார் வரையிலும் சொல்கின்றனர் இருபினும் "தந்தையுமானவள்" என்று அவள் வர்ணிக்கப்படுவதில்லை.

இவ்வகை உவமைககளை தொடுத்தவர்கள் ஆண்கள் என்பதால் "தந்தையுமானவள்" என்ற சொல் அழிந்து விட்டதோ? அல்லது அழிக்கப்பட்டு விட்டதோ இந்த ஆணாதிக்க வர்கத்தால்?

#இனியன் 

No comments:

Post a Comment