3 Mar 2014

உலகத்தின் சிறுபான்மையினர்


ஒவ்வொரு முறையும் புகைவண்டி பயணத்தின் போதும் மாற்றுத்திரனாளிகளுக்கென உள்ள தனிப்பெட்டியில் பயணம் செய்கையிலும் ஒவ்வொரு முறையும் சண்டைகளும் சச்சரவுகளுக்கும் குறைவில்லாப்பயணமாகவே அமைகிறது.மற்ற பயணிகள் அதில் ஏறிக்கொண்டு செய்யும் சண்டைகள் சொல்லில் அடங்காதவை.சில நேரம் மற்றவர்கள் யாரும் ஏறமுடியாத அளவிற்கு கதவுகளை அடைத்து சென்றாலும் வெளியிலிருந்து வரும் வசவுகளும் அதிகம்.

இவ்வாறுதான் சென்றமுறை செல்லும் பொது மாற்றுத்திரனாளிகள் அல்லாதவர்களை இந்த பெட்டியில் ஏறக் கூடாது என்று கதவுகளை அடைத்து உள்ளே ஒரு 12 பேர் வரை அமர்திருந்தோம் மேல்மருவத்தூர் புகைவண்டி நிலையத்தில் வண்டி நின்ற தருணம் நெற்றியில் நாமம் இட்டு கொண்டு சிவப்பு நிற உடையணிந்து ஒரு 10 பேர் கதவை திறக்க சொல்லி பிரச்சனைகள் செய்ய நாங்கள் முடியாது என்று மறுக்க அந்த கூட்டதிலிருந்த ஒரு ஆள் நீங்களெல்லாம் இப்படி இருக்குறப்பவே இவ்வளவு திமிரா? ஆண்டவன் உங்களையெல்லாம் இப்படி நொண்டியா வைத்துள்ளான் என்று சொல்ல உள்ளேருந்த ஒரு நண்பர் அழ ஆரம்பித்து விட்டார்,அவரை சமாதானம் செய்யவே சிறிது நேரம் பிடித்தது.

மற்றுமொரு பயணத்தில் அந்த பெட்டியில் மற்ற நபர்கள் அதிகம் ஏறி இடத்தை நிரப்பிக்கொள்ள இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு கால்களும் இயங்காத ஒரு சகோதரி தனது இயற்கை உபாதைக்கு கூட செல்ல இயலாத அளவிற்கு தவித்துக்கொண்டிருந்தார்.பிறகு அவரால் தாங்க இயலாத நிலை வரவே அவரை உடன் வந்தவர் முதிகில் சுமந்து இயற்கை உபாதைகளை கழித்து வந்த அந்த சகோதரியின் நிலைகண்டு யாரும் நின்றுகொண்டு வந்தவர்களில் ஒருவர் கூட இறக்கப்பட வில்லை.

இவற்றையெல்லாம் அருகிலிருந்து பார்கின்ற போது நமது மக்கள் மத்தியில் இறக்க சுபாவங்கள்,சுய மதிப்பீடுகள்,இயலாதவர்களை மதிக்கும் நிலை போன்ற சுபாவங்கள் அற்றுவிட்டனவோ என்ற எண்ணம் தோன்றுகிறது,இந்த உலகத்தில் மிகப்பெரியளவில் ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்கள் மாற்றுத்திரனாளிகள்தான்.

இப்பேர்பட்ட சிறுபான்மையின மக்களுக்குக்கு உரிய பாதுகாப்பும் அரவனைப்புகளும் கிடைகிறதா என்ற எண்ணம் எழுகிறது.அவர்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை கூட விட்டுக்கொடுக்குக மற்றவர்கள் குறைந்த பட்ச அளவேனும் தயாராய் இல்லை என்ற எண்ணம் எழுகிறது.


இனியன் 

2 comments:

  1. தான் மட்டுமே சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சில அற்பர்களின் செயல் இது .அவர்களது வீட்டிலும் யாராவது இப்படி ஒரு நிலையில் இருந்தால் தான் இரக்கம் வருமோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. உண்மை அதுவாகத்தான் இருக்க வேண்டுமென நினைக்கிறன்.

      Delete