20 Apr 2016

பயணத்தில் ஒரு காதல் கதை...

அண்ணா மழை வெள்ளமெல்லாம் போதுமா?...
அய்யோ போதும் தம்பி.
ஏன் இவ்வளவு பதட்ட படுறீங்க, உங்க வீட்டுல தண்ணி வந்துடுச்சா?...
அட ஆமாம்ப்பா, டைட்டானிக் படத்துலக் கடைசியில வருமுல அந்த மாதிரி தண்ணியில மிதந்தொம்ப்பா...இன்னும் ஒரு நாள் மழை பெஞ்சிருந்துச்சி அந்தப் படத்துல வரமாதிரி என்ன கட்டில்லுலப் படுக்க வச்சி என் பொண்டாட்டி விசில் ஊதி யாரையாவது கூப்பிடும் நிலை வந்திருக்கும்.
ஹா...ஹா...ஹா...அட அம்புட்டு பாசமாண்ணே உங்க மேல.... டைட்டானிக் படம் மாதிரியே.
அப்படியும் வச்சிக்கலாம். ஆனா அவளுக்குத்தானே நீச்சல் தெரியும். எனக்குத் தெரியாதே. ஆனா உண்மையச் சொன்னா இந்த உலகத்துலையே பாசக்காரின்னா அவ ஒருத்திதாம்பா. நாங்க காதலிக்கும் போதிலிருந்தே அவளோட பாசம்தாம்ப என்னையயும் என் வண்டியையும் ஒட்டிகிட்டிருக்கு. என்னைய விடக் கொஞ்சம் அதிகம் படிச்சவ வேற. அவதான் எனக்கு அந்த டைட்டானிக் படத்தையே பார்க்க வச்சது. எம்பசங்களுக்கும் அவதான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு எல்லாத்தையும் செய்யுறா. அவ இல்லனா நானும் இல்ல என் பொழப்பும் இல்ல தம்பி... எவ்வளவு வெள்ளம் புயல் வந்தாலும் என்னைய அவதான் காப்பாத்துவா.
எம் புள்ளைங்கக் கிட்ட கூடச் சொல்லாதத உங்க கிட்டச் சொல்லியிருக்கேன் தம்பி. அவதான் என் உலகம்தம்பி....
சில ஆட்டோ பயணங்கள் இப்படியும் முடிகிறது. இறுதிவார்த்தை அவர் சொல்லிய போது சற்றே திருபி என்னைப்பார்த்தவர் உதடு மெளிதாகப் புன்னகைத்திருந்தது, கண்களில் கண்ணீர் முத்துகளும் கோர்த்திருந்தது. அதற்குப் பின் அவரிடம் என்னால் பேச முடியவில்லை. அமைதியாகவே பயணித்தோம்.
#இனியன்

No comments:

Post a Comment