27 May 2014

தீண்டாமையின் முதற்பக்கம்.

தீண்டாமையின் முதற்பக்கம்

தீண்டாமை ஒரு பாவச்செயல்!
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்றச் செயல்!

என்று காந்திச் சொன்னதாக நமது அனைத்துப் பாடப்புத்தகத்திலும் இருக்கும் ஆனால் இந்த மெக்காலே கல்வி முறையின் மீது ஏற்பட்ட வெறுப்பால்
    
காலாண்டு ஒரு பாவச்செயல்!
அரையாண்டு ஒரு பெருங்குற்றம்!
முலாண்டு ஒரு மனிதத்தன்மையற்றச் செயல்!

என்று மாற்றியமைத்து இந்தக் கல்வி முறையின் மீதும் தேர்வுகளின் மீதும் உண்டான வெறுப்பைப் பதிவு செய்து விட்டனர்.அநேகமாக இந்தப் பதிவு எண்பதுகளின் மத்தியிலிருந்துதான் வெளிப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால் கல்வி என்ற ஒன்று அறிவுச் சார்ந்த மனபெருக்கத்தைக் குறைத்த காலகட்டத்தின் ஆரம்ப நிலை எண்பதுகளின் மத்திதான்.

ஒருபக்கம் கல்வியின் மீது ஏற்பட்டுள்ள விரோதப் போக்குத் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் இதே வேளையில் தான் காந்தியின் வார்த்தைகளைக் கடந்து சென்று நேரடியாகப் பாடத்திட்டதிற்குள் செல்லும் ஆசிரியர்களால் முதல் வார்த்தையை நேரடியாக அல்லது மறைமுகமாவோ கற்பிக்கப்பட்டு வருகிறது நமது கல்வி நிலையங்களில்.இதில் கிராமம் நகரம் என்ற வேற்பாடுகள் கிடையாது.இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் என்னிடம் இருவேறு மாணவர்கள் என்னிடம் பகிர்ந்ததைக் கூரலாம்.

அடிப்படைவசதிகள் சிறிது சிறிதாக வசதிகள் பெற்று வரும் ஒரு கிராமம் அங்குள்ள உயர்நிலை அரசுப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒரு மாணவிப் பல போராட்டங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு வரை படித்துப் பத்தாம் வகுப்பில் 389 மதிப்பெண் பெற்று,மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்று தனது வகுப்பாசிரியரிடம் சென்று அறிவுரைக் கேட்க, அவர் உன் சாதியாளுங்களுக்குப் பத்தாவதே பெரிய விசையம் உனக்கு மேற்படிப்பு வேர ஒரு கேடா, போய் ஏதாவது வேல வெட்டிய பாரு, நீயெல்லாம் மேலப் படிச்சி என்னத்தக் கிழிக்கப் போறனுச் சொல்லி அறிவுரையும் கூற மறுத்து விட்டுத் தனது தீண்டாமையை அந்த மாணவியின் மீது உபயோகித்திருக்கிறார்.ஆனால் தற்போது அந்த மாணவிச் சில நல்மக்களின் உதவியால் மேற்கொண்டு படித்து வருகிறார்.இது இங்கு அநேகக் கிராமங்களில் சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வுதான் என்றாலும் இங்குக் கவனிக்கப்பட வேண்டியது கிராமப்புற ஆசிரியர்களின் தீண்டாமை அணுகுமுறை.

இதே நிலை நகரத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் உள்ளது. நமது தலைநகரில் உள்ள புகழ் பெற்ற ஒரு தனியார் மெட்ரிக் கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சொல்கிறான் எங்கள் பள்ளியில் நல்லாப் படிக்கின்ற மாணவர்கள் நல்லா படிக்காத மாணவர்களுடன் சேரக்கூடாது, பேசக்கூடாது ஒன்றாக அமரக்கூடாது என்ற கட்டுபாடுகள் உண்டு,நான் ஒருமுறை நல்லாப் படிக்காத என் நண்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதற்காக என்னை வெளியில் நிற்க வைத்து விட்டார்கள்,ஆனால் என் நண்பன் இந்தத் தேர்வில்தான் மதிப்பெண் குறைந்தான்,சென்ற தேர்வில் அவன் நல்லா படிக்கிற பசங்க வரிசையில் இருந்தான். என்னான்னுத் தெரியல இந்தத் தடவ நல்லாப் படிக்காத பசங்க வரிசைக்குச் சென்று விட்டான் என்று சொல்லி முடித்தவுடன் நான் கேட்டேன் நல்லாப் படிக்கிற மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டும்,நல்லாப் படிக்காத மாணவர்களின் மதிப்பெண் எவ்வளவு இருக்க வேண்டுமென்று.அம்மாணவன் சொல்கிறான் நல்லாப் படிக்கிற பசங்கன்னா எண்பத்தைந்து மதிப்பெண்களுக்கு மேல எடுத்திருக்கனும்,நல்லாப் படிக்காத பசங்கன்னா அதுக்குக் கீழ இருக்குறவங்க என்று பதில் சொன்னான்.இது நகரத்துத் தீண்டாமை.

அனைத்துப் பாடப் புத்தகத்தின் முதல் பக்கதலிருக்கும் காந்திய வார்த்தை எந்த ஆசிரியர்களும் கவனிப்பதேயில்லை என்றுதான் தோன்றுகிறது,குழந்தைகள் மத்தியில் தீண்டாமை என்ற ஒன்று நெருங்கிவிடக்கூடாது என்பதற்காகவே தான் அவை பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுகின்றன என்று பலர் சொல்கின்றனர்,ஆனால்  நமது ஆசிரியர்களும் கல்வி முறையும் தீண்டாமையைத் தாங்களாகவே முன்வந்து வேவ்வேறு நிலைகளில் குழந்தைகள் மத்தியில் தீண்டாமையை விதைத்து விட்டுச் செல்கின்றன.இது போன்ற ஆசிரியர்களின் அணுகு முறையால்தான் இன்று கல்வியின் மீது பல விமர்சனங்களும்,மாணவர்கள் கல்வியின் மீது ஒருவித வெறுப்புடனும் தங்களது கல்வி பயணத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

#இனியன்                

7 May 2014

ஈழத்து சொதி

அரைக் குறைத் தூக்கத்துடன் அதிகாலைப் பேருந்துப் பயணம் அலைபேசிச் சப்தமிட்டு அந்தத் தூக்கத்தையும் கலைத்து விட அதனை எடுத்துப் பேசத்  துவங்கினேன்.

”ஏய் என்னா எங்கடே இருக்க, இன்னுமாத் திருச்செந்தூர் வரல நேதிராத்திரி ஏறுனேனுச் சொன்ன,திருப்பூரேலுர்ந்து வரதுக்கு இவ்வளவு நேரமாடே” என்று விக்னேஷ் அண்ணன் பேச.

இல்லண்ணே இப்பதான் மதுரைத் தாண்டிருக்கு வர வழியிலச் சின்ன விபத்தாகிப் போச்சிண்ணே!....பெருசா ஒண்ணுமில்லப் பேருந்தோட முன்பக்கக் கண்ணாடி மட்டும் முழுசாப் போய்டுச்சி அத்தோடயே வண்டி ஓட்டிட்டு வாரங்க அதனாலக் கொஞ்சம் தாமதமாகுது எப்படியும் ஏழு மணிக்கா அங்க வந்துடுவேன்.

”சரிடே இங்க வந்த ஒடனே கூபிடு என்னாக் கேட்டியா”.

சரிண்ணே என்று சொல்லி அலைப் பேசியைப் பையில் வைத்து விட்டு மீண்டும் கண்ணயர ஏதுவாகச் சாய்ந்து அமர்ந்துப் பயணத்தைத் தொடர்ந்தவாரே யார் இந்த விக்னேஷ் அண்ணன்?அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்த வாரே மீண்டும் அயர்ந்தப்போனேன்.

ஏய் வாடே என்னா நல்லாருகியாடே?

வாங்கச் சுகமா இருக்கீங்களா?என்ன இப்படி ஆகிடீங்க?

தம்பி எப்படி இருக்க?பாப்பா நீங்க எப்படி இருக்க?பாட்டி எப்படி இருக்காங்க?

நாங்க நல்லா இருக்கோம்?நீங்க எப்படி இருக்கீங்க?
ஏய் நீ போய் மோதலக் குளிச்சிட்டு வாடே அப்புறமாப் பேசுவோம் என்ன கேட்டியா?அஷ்வின்,பாப்பா அவன விடுங்கப் போய்க் குளிச்சிட்டு வரட்டும்.

நீங்க "பூரி" சாபிட்வீங்கள?

ம்,அதெல்லாம் சாப்பிடுவோம் ஆனாப் பூரி வேண்டாங்கண்ணி, சப்பாத்தியாப் போட்டுங்க ஏன்னா ராத்திரிக் கண்ணு முழிச்சி வந்திருக்கேன் அதனால வேண்டாம்.

சரி அப்பச் சப்பாத்தியாப் போட்டுறேன். போய்க் குளிச்சிட்டு வாங்க.

நீங்க இங்க வந்து எத்தன வருசமிருக்கும் ஒரு ரெண்டு வருசத்துக்கு மேலே இருமில்ல,அதுக்குள்ளே என்னா என்னா நடந்துடுச்சி வாழ்க்கைல,அதுவும் போனதடவ இங்கன வந்துட்டுப் போனத்துக்கப்புறம்தானே இதெல்லாம் நடந்தது, நாங்க உங்களபத்திப் பேசிக்கிட்டே இருப்போம்,அஷ்வின்னும் பாப்பாவும்தான் மாமாவுக்கு என்ன ஆச்சி என்ன ஆச்சின்னுக் கேட்டுகிட்டே இருப்பாங்கப் பாவம்,அவங்களும் சின்னப் பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க,நாங்களும் முழுசா எதுவுமே சொல்லல,சொன்னாலும் புருஞ்சிருக்காதுல அவங்களுக்கு.

இன்னொரு சப்பாத்தி வைக்கட்டா?அய்யோ வேண்டாம் இப்பச் சாப்பிட்டதே அதிகம் முன்ன மாதிரிச் சாப்பிட முடியறது இல்ல.

என்னடே எங்கப் போகலாம் கண்டிப்பாத் செந்தூர்க் கோவில் பாக்க வந்திருக்க மாட்டே என்னாப் பண்ணலாம்.

நீங்கதான் சொல்லணும்,எனக்கு ஒரு வாரம் விடுப்பு,அதனால மூன்னு நாளு இங்கத்தான் இருக்கப் போறேன் கோவில் தவிர இங்க பக்கத்தல என்னால்லாம் இருக்கோ அங்கெல்லாம் போகல்லாம்.
மூன்னு நாளு இங்கதான் இருக்கப் போறீங்களா?கல்யாணம் பண்ணி வந்த இந்தப் பத்து வருசத்துல இப்பத்தான் இங்க  தங்கப் போறீங்க இல்ல, இந்தப் பத்துவருசத்துல ரெண்டுத் தடவத்தான் வந்திருக்கீங்க அதுவும் தங்கல, இந்தத் தடவத்தான் தங்கப் போறீங்க.

“என்னது கல்யாணம் ஆகிப் பத்து வருஷம் ஆகிடுச்சா!..”
“ஏய் என்னாடே ஆச்சிரியமாக் கேக்க,மறந்துட்டியா?”

இல்லண்ணே எட்டு வர்சம்தானே ஆகுதுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.

நல்லா நினைச்சப் போடே,அஷ்வினுக்கே எட்டு வசயசாகப்போகுது.

ஓ,நாள் என்னா வேகமாப் போகுது இல்ல?சரி நாம எங்கப் போறது? இங்க பக்கத்துல என்னா இருக்கு,அங்க வரப்பெல்லாம் எதோ சோனைனுச் சொல்லுவீங்களே அங்க போகலாமா?

“நாமச் சந்திச்சி என்ன ஒரு பண்ணிரண்டு வருசமாகிருக்குமா?”

இருக்கும்டே.என்னாத் திடீர்னு இப்படிக் கேக்க?

சும்மாதான் திடீர்னு எப்பப் பழக ஆரம்பிச்சோமுனு ஒரு நினைவு,அதான் கேட்டேன்.வீட்டுல எதுவும் சண்டையா என்ன?

இல்லடே,ஏன் கேக்க?..

அண்ணிப் பழைய மாதிரி இல்லாமா ஏதோ வித்தியாசம இருக்குற மாதிரி இருந்துச்சி,அதான் கேட்டேன்.

ஓ,அதுவா இப்பப் பசங்களுக்கு நாலு நாள் விடுப்புல அதான் என்னோட சொக்காரங்க வீட்டுக்கு எங்கையாவது போகலாமுன்னு கேட்குறாங்க,நானும் பத்து வருசமாச் சொல்லிகிட்டே தான் இருக்கேன்,என் குடுபத்து ஆட்கள் கூடச் சேரணுமுன்னு கேட்கக் கூடாதுன்னு,அதான் அங்க பிரச்சனையே.

சரிதானேண்ணே அவங்கக் கேட்குறது,அவங்களுக்கும் அந்தப் பாட்டிய விட்டா யாரு இருக்காங்க அதான் கேட்குறாங்க,ஆமா அவங்க இலங்கையிலிருந்து வந்து எத்தன  காலம் ஆகுது.

“அது 1995ல வந்தாங்கனு நினைக்குறேன்.”

வந்த எட்டு வருசங்கழிச்சி உங்களக் கட்டிகிட்டாங்க,உங்கக் கல்யாணத்துக்கு அப்புறமாவது உங்க வீட்டோட சேர்ந்து இருக்க வேண்டியதுதானே,அவங்களுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்.

என்னாடே சொல்லுற?எங்குடும்பம் சரியான பயித்தியக்காரக் குடும்பம்டே பணத்தத் தவிர வேர எதுவும் தெரியாது. அவென்களுக்குப் பணம்தான் வாழ்க்கைன்னு நினைப்பவங்க,நானும் சின்ன வயசுலே கொஞ்சம் அப்படி இப்படினு இருந்தேல அப்ப ஒரு தடவா எங்கப்பன வெட்ட வேரப் போயிட்டேன்.அதெல்லாம் அவென்களுக்கு மனசுல அப்படியே இருக்குல.

“ஐயோ எதைய எதையோல்லாம் நாமப் பேசியிருக்கோம் ஆனா இப்பத்தான இதையெல்லாம் சொல்லுறீங்க”.

அதுவுமில்லாம நான் இப்ப வீட்டுக்குப் போனா என்னைய வெட்ட ஒருத்தன் காத்துட்டு இருக்கான்,என்னைக்கா இருந்தாலும் அந்த எண்ணம் மாறாது அவனுக்கு.

"அது யாரு?"

எல்லாம் என் அக்கா புருசன்தான் அதெல்லாம் பெரிய கதடே சின்ன வயசுலையே தண்ணிய போட்டு வம்புபன்னிகிட்டு அவன வெட்டுவேன் இவன வெட்டுவேன்னு திருஞ்சி இப்ப ஏதோ அரசாங்க வேல பாக்கேன்,அதனால இப்படியே இருந்துட்டுப் போகலாமுன்னு இருக்கேன்,அதான் குடும்பத்தப் பாத்துக்க அண்ணன் தம்பி, அக்கா தங்கைன்னு மொத்தம் ஆறு பேரு இருக்காங்களே அது போதும்,இப்பவும் என்னைய கண்டா வேட்டனுமுனு எங்க அக்கா வீட்டுக்காரன் சொல்லுறதா எங்க மாமா சொல்லுவாங்கடே,ஆனா நானும் சும்மா இல்லத் தில்லுக்கா அவன் ஊருலையே எடம் வாங்கிப் போட்டிருக்கேனாப் பாத்துக்கோடே!......

இந்த எடத்தப் பாரு,இதுதான் என்னாப் படம் அது விசால்,நதியா எல்லாம் நடிச்சது?

“தாமிரபரணி”

அந்தப் படத்துலக் கடைசிச் சண்டல வரும்முல அந்த எடம்.இப்ப அந்தக் கோவிலுக்குதான் போயிட்டிருகோம்.

"என்னது கோவிலுக்கா?அட என்னாணே  இது. நான்தான் கோவில்லுகேல்லாம் வேண்டாமுன்னு சொன்னேன்ல".

நீ வாடே வந்து அந்த எடத்த பாரு மோதல அதுக்கப்புறம் சொல்லு எப்படி இருக்குனு.

அண்ணே நல்லா இருக்கே.என்னா எடமுன்னே?கோவில் பேரு என்னாச் சொன்னீங்க? சும்மா காட்டுக்குள்ள இருக்குறத் தனித் தீவு மாதிரி இருக்கே.

இந்தக் கோவில் பேரு “சுனைக் காத்த அய்யனார்”.
“அப்படினா?”

இதோ கோவிலச் சுத்தி எரி இருக்கே இதத்தான் சுனைனுச் சொல்லுவாங்க,அதனால் அந்தப் பேரு வந்திருக்கும் கண்டிப்பா ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

யாராக் கேட்டாத் தெரியுமுண்ணே?

எனக்குத் தெரியாதுடே.யார்கிட்டையாவது கேட்டுப் பார்க்கணும்?

என்னாண்ணே இவளவுப் பேரு காருல வராங்க இந்தக் காட்டுக்குள்ள இருக்குறக் கோவிலுக்கு?...

ஆமாடே,இது முழுசா நாடார்ச் சாதீ இருக்காங்களே,அந்த மக்கள் அதிகம் வருவாங்கடே,சென்னைலேருந்தேல்லாம் வருவாங்க எல்லாம் பெரிய பெரிய ஆளுங்கத்தான்,அதோ அங்க நிக்குதுப் பாருப் பெரிய குதிரச் செல அது "போத்திஸ்" கடைக் காரங்கக் கொடுத்ததுன்னு சொல்லுறாங்க,அதே மாதிரி இந்த மண்டமுமும் அவங்கக் கட்டுனதுனுச் சொல்லுறாங்க.

உண்மையாலுமேவா அண்ணே?
அப்படின்னுச் சொல்லுறாங்க,எனக்கு சரியாத் தெரியாது. ஆனாப் பக்கத்துலத்தான் அவங்க ஊரு இருக்கு.

அண்ணே பாருங்க அங்க, ஒரு தாத்தா கைல அருவா வச்சித் தீட்டிகிட்டு இருக்காரு,அருமையா இருக்கேண்ணே.

அதாண்டே உண்மையான திருப்பாச்சி அருவா,நீயெல்லாம் படத்துலத்தான் பார்த்திருப்பே,எப்படி இருக்குப் பாருச் சும்மா கம்ம்பீரமா இல்ல? நான் ஊருல அலும்புப் பண்ணிக்கிட்டு இருந்தப்ப வச்சிருந்தேன்,அப்புறம் ஒரு பிரச்சனைலேருந்து தப்பிக்கக்  கிணத்துலப் போட்டாச்சிடே.

வாங்கண்ணே கிட்டப் போய்ப் பார்க்கலாம், அவருக் கையப் பாருண்ணே,கோண மாணலா இருக்கு.

அது கண்டிப்பா வெட்டுத் தழும்புதான், ஆளப் பாத்திலச் சும்மா எப்படி இருக்காருன்னு கண்டிப்பா எழுவது வயசிருக்கும்.பார்த்தா அப்படியாத் தெரியுது.

சரி வாங்கக் கிட்டப் போய்ப் பார்ப்போம்.

நான் வரல நீவேன்னாப் போய்ப் பாரு,

அய்யா,இதுதான் உண்மையான திருப்பாச்சி அருவாங்களா?

“ஆமா,ஏன் கேட்குற?”

இல்ல,இத இப்பத்தான் முத முதல நேருலப் பார்க்குறேன்,அதனாலத்தான் கேட்குறேன்,ஒரே ஒருதரம் கைலப்  பிடிச்சிப் பாக்கட்டுங்களா அய்யா.

என்னா  வேளையாடுதுயாத் தம்பி?ஒருதட இதப் பிடுச்சி பாத்தினா அந்த மோகம் உன்ன விடாது, இது பொல்லாதது,அதெல்லாம் தர முடியாது அங்கிட்டு நகரு.

“ஏய் என்னடே என்ன சொன்னாரு அந்தத் தத்தா?”

அட,போங்கண்ணே நீங்க வேர அதெல்லாம் தமுடியாதுன்னு சொல்லிட்டாரு,நீங்களாவது வந்து கேட்டு வாங்கித் தந்திருக்கலாம். அங்க பாருங்கண்ணே அந்தத் தாத்தா எதோ கேடா வெட்டப் போறாருனு நினைக்குறேன்.வெட்டிட்டாரு,ஒரே வெட்டு தலத் தனியாப் போச்சிண்ணே.பார்த்தீங்களா?

டே!..,அது கெடா வெட்டுற அருவாளா?அப்ப நான் கேட்டிருந்தாலும் தந்திருக்க மாட்டாவக் கேட்டியா,ஏன்னாக்கப் பொதுவாக் கெடா வேட்டுரவங்க அவங்க அருவாளத் தர மாட்டங்க.

சரிடே கிளம்பலாமா?

சரி கிளம்பலாம்,அடுத்து எங்கப் போறது?பக்கத்துல எதுவும் இடம் இருக்கா இல்ல வீட்டுக்கா?

பக்கத்துலையா?சரி வா,வனத்திருப்பதினு ஒரு கோவில் இருக்கு அங்க போவோம்.
திரும்பவும் கோவிலுக்கா?

ஏய் நீ வாடே.உனக்குப் புரியும் அங்க போனவுடனே?அதுவும் நல்லாத்தான் இருக்கும்.

என்னமோ போங்க,நான் எதுக்கு வந்தேன் நீங்க என்னை எங்கக் கூடிட்டுச் சுத்துறீங்க?

அண்ணே ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்க, அங்க பாருங்க அருமையா ஒரு வாய்க்கா ஓடுதுக் குளிக்கலாமண்ணே.

டேய் நீ பேசாம வாடே, இது தாமிரபரணியிலிருந்து வார வாய்க்கா,எதுவும் எடுத்துட்டு வராமக் குளிக்க இறங்குறேன்னு சொல்ற,இன்னொரு நாள் வருவோம்டே.

அதெல்லாம் வேண்டாம் நான் போறத்துக்குள்ள ஒரு நாள் வாரோம் இங்க குளிக்குறோம் சரியாண்ணே?

சரிடே......
இதான்டே வனத்திருப்பதி,என்னாண்ணே இது கோவிலா? இல்லச் சரவணபவன் விளம்பர இடமா?

ஆமாடே,கிட்டத்தட்ட அப்படித்தான் இந்தக் கிராமமே அவங்களோடதுதான்,கோவில வந்து பாரு?

அட ஆமானே,ஒரு இடம் பாக்கியில்லாமச் சரவணபவன் சரவணபவனு எழுதி வைச்சிருக்காங்க,இது என்னாக் கோவில் அண்ணே?

டேய், திருப்பதினுப் பேரப் பார்த்தாவே தெரியல,இதுப் பெருமாள் கோவில்டே.....

ஆனா எல்லாச் சாமிச் சிலையும் இருக்கு போலப் பிள்ளையார், முருகன், லிங்கம், அங்க பாருங்க ஒண்டிக் கருப்பண்ணச் சாமிச் சிலை இப்படி எல்லாம் வைக்க விட மாட்டாங்களே அண்ணே,அதுவும் வேல பார்க்குறவங்க எல்லாம் அவாளா இருக்குறப்ப,இப்படி எல்லாச் சிலையும் வைக்க மாட்டங்களே பிரச்சனைப் பண்ணிடுவாங்களே?

எல்லாம் காசுதான்டே,இவிங்களுக்கெல்லாம்  என்னாச் சம்பளம் தெரியுமாடே?சும்மா வருமானம் அள்ளுராங்க?அப்புறம் அங்க பாரு எல்லோருக்கும் ஒருத்தன் நாமம் போட்டுட்டு இருக்கான்.வா நாமளும் போய்ப் போட்டுக்குலாம்.

அண்ணே நான் இங்க வந்ததே தப்பு என்னையும் நாமம் போட்டுக்கச் சொல்றீங்க…..

அட வாடே,நான் மட்டும் என்ன தினமும் நாமம் போட்டுக்கிட்டுச் சாமிக் கும்பிட்டுகிட்டு இருக்குற மாதிரிப் பேசுத?அங்கப் பாருடே லட்டு தராங்க,லட்டு வாங்கனுமுனா,நாமம் போட்டிருக்கணும் அதுக்குதான் சொன்னேன்,வா நாமம் போட்டுக்குவோம் லட்டு சாப்பிடுவோம் இங்க லட்டு நல்லா இருக்கும்.
லட்டு அருமையா இருக்கேண்ணே?இன்னொரு லட்டுக் கேட்டாத் தருவாங்களா?அடே ஒருதரவ நாமம் போட்டா ஒரு லட்டுதான் அதத் தண்ணித் தொட்டு அழுச்சாதான் போகும்,அழிச்சாலும் அது சரியாப் போகாது. சோப்புப் போட்டுக் கழுவனும் அதனாலாத் திரும்பி வாங்க முடியாது,அதனாலப் போகலாம் வா, அங்க பாரு வெளிய எதோ குடுக்குறாங்க,அதெல்லாம் இருக்கட்டும் இவ்வளவு பெருசாப் பண்ணுறாங்கக் கும்பலே இல்லையே அண்ணே?

இன்னைக்குப் புதன் கிழமைல அதனாலாக் கும்பல் கம்மியாத்தான் இருக்கும் நாளைக்கும் சனிக் கிழமையும் வந்து பாருத் தெரியும் கும்பல் எப்படி இருக்குமுன்னு?

"இந்த இடம் கோவில் முழுசாச் சரவணபவன் காரவங்களோடதுதானா?"

அதான் ஏற்கனவே சொன்னேனே, இந்தக் கிராமம் முழுசும் அவங்களோடதுதான்,சென்னையிலக் கொல்லையடிக்குறக் காசையெல்லாம் இங்க வந்து கொட்டுறாங்க,அவ்வளவும் கருப்புப் பணம்டே.

சென்னையில மட்டுமாச் சம்பாதிகுறாங்க உலகம் புராவும்தான் சம்பாதிகுறாங்க, ஒரு தோசை எண்பது ரூபாய் அண்ணே அதையும் வாங்கிச் சாப்பிடுறதுக்கு ஆளுங்க இருக்கத்தான் செய்யுறாங்க? இவ்வளவு கொள்ளையடிச்சி இப்படிக்  கோவில் கட்டுறாங்களே, அந்தக் காசுக்கு இந்த ஊருல எதாவது இலவசப் பள்ளியும்,இலவசச் சாப்பாடும் போடலாம். அத பண்ண மாட்டாங்க, ஆனாக் கோவில் கட்டி அதுல தங்கத் முலாம் பூசி கொண்டாடுவாங்க, அதுக்கும் நம்மாளுங்கப் பணத்த கொண்டுவந்து கொட்டுவாங்க இதெல்லாம் எங்கப் போய்ச் சொல்றது.தனி மனித விருப்பு வெறுப்புச் சுயநலம் போன்ற எல்லாத்துக்கும் அடிமையா இருந்து பண்ணுறத் தப்பெல்லாம் பண்ணிட்டு ஊருல வந்து கோவில் கட்டிட்டாத் தப்பெல்லாம் மக்கள் மறந்துடுவாங்க இல்லையா அண்ணே?இதுல இருக்குற ஒரே ஆறுதல் என்னான்னா. ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு குடுக்குறாங்க,அதுமட்டும் என்ன சும்மாவாச் சம்பளம் கொசுறாத்தான் இருக்கும் வேல அதிகமா இருக்கும்,எதோ அதுவாதுப் பன்னுராங்கலேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான் இல்லையாண்ணே.

என்னாண்ணே கிருபானத வாரியாருகேல்லாம் சிலை வச்சிருக்காங்க?ஒரு வேலை அவரையும் சாமியாக்கிட்டாங்களோ?சரி அப்படியே கிளம்பலாம்.  

அங்க பாருடே பெருசா ஒரு காம்பவுண்ட் சுவர் கட்டிவச்சிருக்காங்கக் கொஞ்சம் எட்டிப் பாருடே.

என்னாண்ணே ஒரு தோட்டம் மாதிரித் தெரியுது.

ஆமாடே இதுவும் அவங்களோடதுதான்,எவ்வளோ பெரிய இடத்துக்குச் சுவர் கட்டி வச்சிருக்காங்கப் பாரு.சரி இப்ப எங்க நேரா வீட்டுக்கா இல்ல வேர எங்கயாச்சுமா அண்ணே?வீட்டுக்குத்தான் போயிட்டு நல்லாப் படுத்து தூங்கு மோதல.நாளைக்கு வேர இடத்துக்குப் போவோம்.
என்னா எங்கே எங்கப் போயிட்டு வந்தீங்க?

சொனைக்கும்,வனதிருப்பதிக்கும் போன்னோம்.

வனதிருபதிக்குப் போயிட்டு நாமம் இல்ல வந்திருக்கீங்க?

சாப்பிடப் போன்னப்ப அழிச்சாச்சி.சரி அண்ணி நான் துங்க போறேன்,ஆமா நீங்கதான் மீன் நல்லா சமிபீங்கள நாளைக்குப் பண்ணுங்க.

நாளைக்கு மீன் கிடைக்காதே. இன்னைக்குக் கிருஸ்துமஸ்ல அதனால இன்னைக்கும் நாளைக்கும் கடலுக்குப் போக மாட்டங்க அதனால மீன் கிடைக்காது,நாளானைக்கு வேணாப் பண்ணுவோம்.

இன்னைக்கு எங்கண்ணே?

என்னடே காலையிலத் தூங்கி எழுந்திருச்சவுடனே கேக்க.

அப்புறம் கேக்க மாட்டாங்களா?

இன்னைக்கு மணப்பாடுப் போவோமாடே?

ஆஹா அருமையைண்ணே,ஏழு வயசுல அப்பா கூட வந்ததுண்ணே கண்டிப்பாப் போவோம்.அங்க ஒரு சர்ச் இருக்குல.

மணப்பாடுப் போறத்துக்கு முன்னாடிக் குலசேகரப்பட்டினமுனு ஒரு சின்ன ஊரு இருக்குடே,நல்லா இருக்கும் உனக்குப் பிடிக்கும்.

அங்கேயும் போவோம்,அங்க என்னா இருக்கு.

கடற்கரையும் அதுபக்கத்துல முத்தாளம்மனுக் கோவில்னு ஒரு பழமையான கோவில் இருக்கு.

அண்ணே கோவில்,சர்ச் தவிர வேர ஏதும் இல்லையா?

நீ வாடே உனக்குப் பிடிக்கும்.

நல்லா இருக்கே அண்ணே கடல் எதிரில் கோவில், சின்னதா ஊரு,ஆனா இவ்வளவு சின்ன ஊருலயும் நம்மாளுங்கப் பிளாட் போட்டு விக்கிறாங்க,அவங்கள ஒண்ணுமே பண்ண முடியாது போல இருக்கே?.......

ஆமாடே...

அங்க என்னாண்ணே ஒரு மேட, நாடார்ச் சங்க உபையமுனுப் போட்டிருக்கு?
இங்க தசரா விமர்சனையாக் கொண்டாடுவாங்க அப்ப வெளியுர்லேருந்தேல்லாம் ஆளுங்க வருவாங்க அப்பக் கூத்து நடத்துறதுக்குதான் இந்த மேட.

அந்த மேடைல நாடாருங்கக் கூட்டிடு வரவங்கதான் கூத்து நடத்தனும், அந்தப் பக்கம் பாருச் சின்னதா ஒரு மேட மாதிரி ஒரு திட்டு இருக்குப் பாரு,அதுல இங்க இருக்குற  நாடாருங்க இல்லாத மத்தச் சாதீயச் சேர்ந்தவங்க அந்த மேடைலதான் கூத்து நடத்தனும்,இந்த வட்டாரத்துல அவங்கதான் அதிகம் புரியுதாடே,அடுத்து மணப்பாடுப்  போறோமுல அங்க பத்து நாளைக்கு முன்னாடித்தான் சாதீக் கலவரம் நடந்துச்சி அங்க போரப்ப உனக்கே தெரியும்.

"என்னாண்ணே ஊரு முழுசாப் போலீஸ் கும்பலா இருக்கு?."

பத்து நாளைக்கு முன்னாலச் சரியான சாதீச் சண்டடே,வெட்டிகிட்டாங்க ரெண்டோ,மூன்னோ வீட்ட எருச்சிட்டாங்க, அங்க பாருடே ஒரு பீரோல வெட்டு விழுந்திருக்குப் பாருடே, அங்க பாருடே எருஞ்சிப் போன வீடுங்க.

அட ஆமாண்ணே,ஆனா இதப் பத்திப் பேப்பர், செய்தின்னு எதுலையும் வரல,அதெல்லாம் வராதுடே எப்பவாது நடந்தாப் பரவா இல்லை இங்கதான் அடிக்கடி நடத்துவாங்களே,ஒரே சாதீலையே அடுசிக்குவாங்க ஆனா அந்த மாதிரி அடிச்சிகிறது ரொம்பக் குறைவுதான்டே.

முழுசாக் கிருஸ்துவர்கள் இருக்கும் ஊருதானே இது,இருந்தாலும் இங்கேயும் சாதீ எப்படி விளையாடுதுப் பாருங்கண்ணே,இவங்க எல்லாம் மதம் மாறினாலும் சாதீய மட்டும் விட்டுத் தர மாட்டாங்க போல.

ஆமாடே,அப்புறம் பாண்டிச்சேரிக்கு அப்புறம் இங்கதான்.அது என்னது அலைல விளையாடுவாங்களே,அந்த விளையாட்டு விளையாடச் சரியான இடமுன்னு தேர்ந்தெடுத்துப் பயிற்சித் தராங்கடே, அங்க பாரு ரெண்டுப் பேருப் போயிட்டு வந்துட்டு இருக்காங்க.

சரிண்ணே கிளம்பலாமா?போயிட்டு அப்படியே நாளைக்கு ஊருக்குப் போறதுக்கு டிக்கெட் போட்டுட்டு வீட்டுக்கு போவோம்.சரிடே வாப் போவோம்.

என்னாண்ணி மீன் சமைகிறீங்க போல?

ஆமா,எங்கட ஊரு சமையல் செய்யுறேன்.

ஒரே மொழிய இப்படியே ஆளுக்கு ஒரு விதமாப் பேசுனாக் குழந்தைகள் எப்படிப் பேசுவாங்கக் கொஞ்சம் சிரமம்தான்,அஷ்வின் ரெண்டு விதமாவும் பேசுறான்,பாப்பா என்ன பன்னபோகுதுன்னு தெரியல?உங்க ஊருச் சமையல்ன்னா என்னாச் சமையல்?
எங்கட நாட்டு மீன் சொதிக் குழம்பு வைக்குதேன்.எனக்கும் அதே சந்தேகம்தான்  பாப்பா என்ன பண்ணப் போறான்னு,சந்தேகமாவும், பயமாவும் இருக்கு.

என்னாப் பயம் அண்ணி?

ஆமா,இங்க நடக்குற விசையங்களையெல்லாம் பாக்குதப்பப் பயம் தானாவே வருது. பொம்பளப் பிள்ளைகள எப்படி வளர்குறதுனுப் பயமா இருக்கு.எங்களட நாட்டில் நான் இருந்தப்ப ராத்திரி 1௦ மணிக்கெல்லாம் வெளியத் தைரியமா வருவோம் போவோம்,எட்டாவது படித்தப்ப எங்கையோ நானும் அம்மாவும் போயிட்டு வந்தோம். அப்ப எங்க ஊருலக் கரென்ட் எல்லாம் இருக்கும். 89லதான் கரென்ட் எல்லாத்தையும் நிப்பாட்டுனாங்க,அன்னைக்கு நாங்க வெளியப் போனப்பத் திடீர்னுக் கரென்ட் நின்னுடிச்சி அப்ப யாருனே தெரியல ரெண்டுப் பேரு நாங்க வந்து வீட்டுல விடுரோமுனுச் சைக்கிளில் வந்து 2 கிலோ மீட்டர் வைக்கும் விட்டுட்டு வந்தாங்க,நாங்களும் தைரியமா ஏறி வந்தோம்.அந்த மாதிரியெல்லாம் இப்ப இங்க வர முடியுமாச் சொல்லுங்க, சின்னக் குழந்தைன்னுக் கூடப் பார்க்காம என்னா என்னா நடக்குது இங்க யாராவது தெரியாதவங்களப் பார்த்தாவே பயமா இருக்கு,அதுவும் பொம்பளப் பிள்ளைங்களத் தனியா அனுப்பப் பயமா இருக்கு.

அப்படியெல்லாம் பயபிடனுமுன்னு யாருச் சொன்னது அண்ணி வெளியப் போற எல்லாப் புள்ளைங்களுக்குமாத் தப்பா ஏதாவது நடக்குது,இங்கேனு இல்ல வளர்ந்த எல்லா நாட்டுளையும்தான் ஏதாவது இந்த மாதிரி நடக்குது,அதுக்காகப் பொம்பளப் புள்ளைங்கள வெளிய அனுப்பாம வைச்சிட முடியுமா என்ன,படிக்கயெல்லாம் அனுப்ப வேண்டாமா?.

ஆமாப் பொல்லாத படிப்பு எங்க ஓருல நான் ஒன்பதாவது வரைக்கும் படிச்சேன்,அத்தன விசையம் கத்துகிட்டோம்,நிறையா விசையம் நாங்களாப் படிக்கணும்.நான் மட்டும் அங்கயே முழுசாப் படிச்சிருந்தேன்னா  எப்படி இருந்திருப்பேன் தெரியுமா? நான் ஒன்பதாவது படித்திட்டு இருந்தப்பச்  சண்டத் தீவிரமா வர ஆரம்பிச்சிடுச்சி, கரென்ட் எல்லாம் நிருத்தியாச்சி,நாங்க நூலகம் போகாத நாளே இருக்காது. அங்க பள்ளிகளிலும் அப்படிதான் நடத்துவாங்க இங்க என்னாடானா எதாவது ஒரு புள்ள நூலகம் போகுதுங்களா?அங்க மட்டும் சண்ட இல்லாம இருந்திருந்தாப் படிப்பெல்லாம் அருமையா இருந்திருக்கும்,இப்ப நான் படிச்சப் பள்ளி,நூலகம் எல்லாம் போய்டுச்சி,எங்க ஊருல எதுவுமே இல்லையாம்.அந்த மாதிரி ஏதாவது பள்ளி இங்கேயிருந்தான் பிள்ளைகள அதுலச் சேர்த்து விட்டுடுவேன். இங்க பொம்பளப் புள்ளைய வளர்க்குறதுக்குப் பயமாவே இருக்கு.

நீங்க சொல்றதுக்கு மட்டுமில்லை உலகத்துல நடக்குற எல்லா விசையங்களுக்கும்  பதில்தேடிகிட்டும்,பயந்துகிட்டும் இருந்தால் வாழ்க்கை முழுசுக்கும் பயந்துகிட்டே இருக்க வேண்டியதுதானே,குழந்தைகளை அவங்கப் போக்குல அவங்களுக்குத் தேவையானத நம்மால  முடிஞ்ச வரைக்கும் ஒரு வழியப் போட்டுக் காட்டி வளர்க்க வேண்டியதுதான்.மத்ததெல்லாம் அதுவா நடக்கும் வாழ்க்கையை அது போறப் போக்குலப் போக விட்டு அது பின்னாடி அவங்கப் போகுறதுக்குக் கத்துக்கொடுத்தனும் அவ்வளவுதான் நம்ம வேலை.மத்ததெல்லாம் அவங்களாப் பார்த்துக்குவாங்க. நீங்க சமைச்சி முடிங்கச் சீக்கிரம் பசிக்குது. சாபிட்டுட்டுக் கிழம்பனும்.

இதோ முடிச்சிட்டேன்,சாப்பிடலாம் வாங்க.

அருமையா இருக்கே அண்ணி. இந்தக் குழம்புப் பேரு என்னாச் சொன்னீங்க.

“சொதிக் குழம்பு”.

"இங்கேயும் தென்காசிப் பக்கம் சொதிக் குழம்புன்னு ஒன்னு வைப்பாங்க."

"எங்க ஊரு குழம்பு இது."

ஓ அப்ப இதுக்குப் பேரு “ஈழத்துச் சொதி”ன்னுச் சொல்லுங்க,அண்ணே நீங்க சாப்பிடல?ஓ நீங்கதான் மீன் சாப்பிட மாடீங்கள,இவ்வளவு அருமையா இருக்கு ஏன் நீங்க சாப்பிடப் பழகிக்க வேண்டியதுதானே?

நல்லாச் சொல்லுங்க மீன் வாங்கித் தரதொடச் சரி இவங்கச் சாபிடுறதே இல்ல.

சரி விடுங்க அவருப் பழகிக்கல,சொதி அருமையா இருந்துச்சி,நான் கிழம்புறேன் 3 மணிக்குப் பஸ்,அண்ணே கிழம்புவோமா?சரி அண்ணி நான் கிழம்புறேன்.
அடிக்ககடி வாங்கச் சொந்தகாரங்கனு யாரும் வரதில்ல ரெண்டுப் பக்கமும்,நீங்களாவது அப்பப்ப வாங்க.

கண்டிப்பா வாரேன் அண்ணி. பசங்களப் பார்த்துகோங்கத் தேவையில்லாமப் பயந்துக்காதீங்க.

சரிடே பார்த்துப் போடே.போயிட்டுப் போன் பண்ணு.

சரி அண்ணே.இப்பத்தான் ஏமாத்திட்டீங்க அடுத்த முற வரப்ப அந்த ஓடைலக் குளிக்குறோம், என்று சொல்லி முடிக்கப் பேருந்துக் கிழம்பியது,மீண்டும் அதே பழைய நினைவுகள் யார் இந்த விக்னேஷ் அண்ணன்?அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்த வாரே.

5 May 2014

தாயிக்கு பின் தாரமாகவும் தந்தையுமானவள்

"தாய்க்கு பின் தாரம்" என்ற வர்ணனையை காலம்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வருகிறது,ஆனால் "தந்தைக்கு பின்னும் தாரம்" என்பதை ஏனோ நம் மக்கள் சொல்ல விருப்பப்படுவதில்லை.

இதில் ஒழிந்திருக்கும் உளவியல் என்னவென்றால் தாய்யை போற்றுதல் என்று உயர்த்தி உயர்த்தியே நம் தாய் என்ற பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போலவே தாரத்தையும் அடிமை படுத்த நினைக்கும் ஆணாதிக்க மன உளவியல் அரசியலே என்று உணர முடிகிறது.

பெண்களை அடிமையாக வைத்திருந்தால் ஆண்கள் சுதந்திரமாக இருந்து விடலாம் என்ற மனப்போக்கைதானே "தாய்க்கு பின் தாரம்" என்று செயல் பட துவங்கியிருப்பார்களோ?என்று உணர தோன்றுகிறது...

மனைவியை இழந்த ஒரு ஆண் மறுமணம் செய்யாமல் தன் குழந்தைகளை வளர்த்தால் அவனை "தாயுமானவன்" என்று கொண்டாடும் நம் சமூகம்,கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகளை வளர்த்தால் அவளை "தந்தையுமானவள்" என்று சொல்வதில்லை.

இங்கு தந்தையுமானவளாக இருப்பவர்களை இன்றைய சமூக சூழலிலும் நம் ஆணாதிக்க சமூகத்தால் பார்க்கப்படும் பார்வையும் வைக்கப்படும் விமர்சனகளும் தந்தையுமானவர்களை கூனச்செய்து புறம் தள்ளுகிறது. 

ஒருவேளை புராணக்கதைகளில் சிவபெருமான் என்ற கடவுள் கதாபாத்திரம் "தாயுமானவன்"என்ற உருவகத்தொடு இப்பூலோகம் வந்து அனைவரையும் காத்தருளினார் என்று சொல்வதனால் அதை மட்டும் வைத்துகொண்டு கொண்டாடுகின்றனரோ?,ஆனால் உலகை தாயாக இருந்து காக்கும் பராசக்தி என்று சிவனின் துனையாளாகா உருவகப்படுத்தும் அதே புராணங்களும்,ஏன் நமது பாரதியார் வரையிலும் சொல்கின்றனர் இருபினும் "தந்தையுமானவள்" என்று அவள் வர்ணிக்கப்படுவதில்லை.

இவ்வகை உவமைககளை தொடுத்தவர்கள் ஆண்கள் என்பதால் "தந்தையுமானவள்" என்ற சொல் அழிந்து விட்டதோ? அல்லது அழிக்கப்பட்டு விட்டதோ இந்த ஆணாதிக்க வர்கத்தால்?

#இனியன்