நான் பிறப்பதற்கு முன்பிலிருந்து அப்பா வைத்திருந்த National கம்பனி ரேடியோ அவ்வபோது பழுதாகிறது,என்று எனது எட்டாம் வயதில் வாங்கியதுதான் இந்த two-in-one டேப்ரெக்கார்டர்.
நான் பழைய கிராமபோன்களில் ஒரே முறை மட்டுமே. இருந்தாலும் இந்த டேப்ரெக்கார்டர் வாங்கிய அன்று இதனுடன் சேர்ந்தால் போல் வாகிய கேசட்டுகள் அப்பா அம்மாவிற்காகப் பாதகாணிக்கை,பாவ மன்னிப்பு,பாசமலர்,பாலும் பழமும்,இருவர் உள்ளம்,என் தம்பி,புஷ்பவனம் குப்புசாமி நாட்டுபுறப் பாடல்கள்,எனக்கும் அக்காவிற்காகவும் தேவர் மகன் , எஜமான் ,திருடா திருடா,ஜென்டில்மேன் வாங்கிவந்தோம்.
இசைத் துறையில் மிகப் பெரிய அளவில் தொழில்நுட்பங்கள் இல்லை என்றாலும் ஏ.ஆர்.ரகுமான் என்ற ஜீவன் நம்மூருக்கு அந்தத் தொழில் நுட்பங்களைப் புகித்துக் கொண்டிருந்த துவக்கக் காலம் அது.பெரும் பாலும் இரவு நேரத்தில் பாதகாணிக்கை ,பாசமலர்,பாலும் பழமும் எனப் 'பா'னா வரிசைப் பழைய திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் தேவர் மகன்,எஜமான் போன்றவை என்னை உறக்கத்தில் ஆழ்த்தினாலும்.பகல் வேலைகளில் மிகத் துள்ளியமான அதிர்வில் ஏ.ஆர்.ஆரை அதிர வைத்துக் கொண்டிருக்கும்.
"அற்பனுக்குப் பணம் வந்தால் அத்த ராத்திரியில் குடைப் பிடிப்பானாம்." அந்தப் பழ மொழிக்கு ஏற்றார் போல் பள்ளித் தோழர்களையெல்லாம் அழைத்து வந்தும் பாடல்களை அலற விட்டும் ஆனந்தக் கூத்தாடியதுமுண்டு.
திருடா திருடா, ஜென்டில்மேனுக்குப் பிறகு வீட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக அடுத்தக் கேசட் வாகுவதற்கு நான்கு மாதங்களுக்கு மேல் ஆனது.அதன் பிறகு மாத பட்ஜெட்டில் குறைந்த பட்சம் ஒன்று அதிகப் பட்சம் இரண்டு கேசட்டுகள் வாங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் தயாராகிச் சில மாதங்கள் வாங்கியும் சில மாதங்கள் வாங்காமலும் சென்றது.அதற்குள்ளாக வீட்டினுள் பரிச்சை நேரத்தில் வெளியேயும் மற்ற நேரத்தில் உள்ளேயும் சென்று வந்த சன் டிவி என்ற கேபிள் அரக்கன் நுழைந்த பிறகு கேசட் வாங்குவது மிகவும் தடைப் பட்டது.
ஆனால் கேசட் வாங்கிய மாதகளில் வீட்டினுள் வந்து அதிர வைத்த சில கேசட்டுகள் கிட்டத் தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகள் என்னுடனே இருந்தது.அவற்றில் மிக முக்கியமானவையாகவும் மிகவும் ஆசைப்பட்டும் அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடியும் பரணில் ஏறி உட்கார்ந்தும் தொங்கியும் வாங்கியவை மைகேல் ஜாக்சனின் டான்சுராஸ் ,காதலன், ஜீன்ஸ், உயிரே,போன்றவையானாலும் அப்பாவாக வாங்கிவந்த சின்னத்தம்பி,விஜயலட்சுமி நவநீத கிர்ஷ்ணன் நாட்டுபுறப் பாடல்கள் போன்றவையும் எனக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருந்தது.
பின்நாட்களில் பணிநிலை உயர்வால் வீடும் மாறும் நிலையும் சற்று சிறிய பொருளாதார உயர்வும் வந்த பிறகு கேபிளில் எந்தப் பாடல் நன்றாக இருக்கிறதோ அந்தப் படத்தின் கேசட் மட்டும் வாகினோம் அந்த வரிசையில் வந்தது தான் அலை பாயுதே,வாலி,முகவரி போன்ற கேசட்கள்.
அக்காவும் நானும் முறையே பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு ஒரே வருடத்தில் படித்ததால் கேபிள் மற்றும் கேசட்டுகள் அனைத்தும் தடைப் பட்டுப்போனது வீட்டினுள்.அந்த நேரங்களில் வீட்டில் நான் மட்டும் இருக்கும் நேரத்தில் அந்த நாள் முழுக்கக் கேசட்டுகள் உன்று மாற்றி ஒன்றாக அலறிக் கொண்டேதான் இருக்கும் ஏன்னா நமக்குதான் படிப்பில் ஆர்வம் கம்மியாச்சே.
பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளோமா சேர்ந்த பிறகு பாக்கெட் மணி என்ற ஒன்றும், தனியாகக் கடை வீதிக்குச் செல்லலாம் என்ற சுதந்திரமும் வந்ததும் நானாக வாங்கிய கேசட்டுகளில் லேசா லேசா,மஜுனு,மின்னலே,பார்வையோன்றே போதுமே,தீனா,7G ரெயின் போ காலனி,காதல் எனப் பட்டியல் நீண்டாலும் முதன் முதலாக எனக்குப் பிடித்த பாடல்கள் என நான் ரெகார்ட் செய்த பதினைந்து பாடல்கள் கொண்ட கேசட் சற்று நாள் வரை என்னிடமிருந்தது.
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் கணினி வீட்டினுள் நுழைந்ததும் கேசட்டுகளுக்கான முற்றிலுமாக வாங்குவதையும் நிறுத்தி விட்டேன்.அதன் பிறகான ஒரே வருடத்தில் கேசட் என்ற சொல் கூடப் புழக்கத்திலிருந்து விடு பட்டுப் போனது.அதன் பிறகு என்னிடமிருந்த கேசட்டுகள் அனைத்தும் கல்லூரி படித்த காலத்தில் தினமும் செல்லும் பேருந்
தில் போடுவதற்காகக் கொடுத்து விட்டேன்.
தற்போது முழுக்க எண்ணற்ற வசதிகளில் பல புதிய தொழில் நுட்பத்தில் பாடல்கள் வந்து கொடிருந்தாலும்,பாடல்கள் இல்லாத மனிதன் எவனுமில்லை என்ற அதீத நிலை வந்த பிறகும் பழைய கேசட்டுகளில் பாடல் கேட்கும் இனிமையும் சுகமும் இன்றளவும் நம்மை வருடிக் கொண்டுதானிருகிறது...
தற்போது வீட்டுப் பரணில் எதோவொரு அட்டைப் பெட்டியில் டேப்ரெக்கார்டர் மட்டும் பாதிச் சிதிலமடைந்த நிலையில் இருகிறது என்று நினைக்கிறன்.
#இனியன்
No comments:
Post a Comment