நேற்று முன்தினம் இரவு படுக்கைக்குச்
செல்லவே மிகத் தாமதமானது.படுத்தவுடன் தூங்கும் இனத்தைச் சேர்ந்தவனாக நான்
எப்போதும் இருந்ததில்லை என்ற காரணத்தால் தூக்கம் வர ஒரு மணிக்கு மேல் ஆயிற்று.
தூங்க ஆரம்பித்த சிறிது
நேரத்திற்கெல்லாம் ஒரு கனவு. முப்பதிலிருந்து நாற்பது பேர் வரை கத்தி,கடப்பாரை,மண்வெட்டி,ரம்பம் போன்ற பூலோக உபயோக
ஆயுதகளுடன் என்னைச் சுற்றிக் கொண்டு என் வயிறு பகுதியை கரக் கரவென அறுத்து
உள்ளே உள்ள அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு நெருப்பு பற்ற வைத்து அதில் போட
போகும் தருணம் நான் கண் விழித்துப் பார்கிறேன்,அனைவரது முகத்திலும் மருத்துவ முக மூடி,யாரையும் என்னால் அடையாளம் காண இயல வில்லை.
நான் கண் விழித்ததைப் பார்த்த
ஒருவன் சொல்றான்.
"டேய் இவன் இவ்வளவு பண்ணியும் கண் திறக்கிறான் பாருடா!"
இவன என்ன செய்யலாம் என கேட்க .
அதுக்கு அடுத்தவன் சொல்றான்.அப்ப அவன்
மூக்குல இந்தக் குழாய வச்சி அடைச்சிட்டு அவன் கண்ண நோண்டலாம்.அப்பதான் அவன் கண் திறக்கமாட்டன்னுச்
சொல்லிக் கண்ணப் பிடுங்க வரும் நேரம் பார்த்து என் தூக்கம் கலைந்து எழுந்து என்னடா
கனவு இது."அதுசரி நமக்கு ஏற்பட்ட மருத்துவ அனுபவங்கள் தான் இப்படிக் கனவாக
வருகிறது" போல என்று எழுந்து தண்ணீர்க் குடித்து விட்டு மணிப் பார்த்தேன்
இரண்டரையை என காட்டியது அலைபேசிக் கடிகாரம்.
மீண்டும் தூங்கலாம் என முயற்சித்துப்
படுத்த எனக்கு மூன்று மணியளவில் தூக்கம் வந்தது.ஆனால் இம்முறையும் கனவு அதன்
தொடர்ச்சியாகவே சென்றது.அந்தக் கும்பல் என்னை எதோ செய்து அடர்ந்த காட்டுக்குள்
விட்டுச் செல்ல.
"கண்விழித்துப் பார்கிறேன்."
5.7"அங்குலம் உயரம் கொண்ட எனது
உடல் தற்போது 11" அங்குல உடலாக மாறியிருந்தது கண்கள் இருக்க வேண்டிய இடத்தில்
இல்லாமல் ஒரே ஒரு கண் மட்டுமே,அதுவும் நெற்றியில் இருகிறது. ஒற்றைக்
கால் மட்டுமே உடலின் நடுவில் மட்டும்.மேலும் உடல் முழுவதும் கத்தை மயிர்களாகச்
சூழ்ந்துள்ளது.
எழ முடியாமல்,எழுந்து உட்காருகிறேன்.
யோசிக்கிறேன்.
"என்ன ஒரு வினோதம்?"
என் உடல் நியண்டர்தல் மனித உருவாகவும்
இல்லாம் உலகின் ஆதிக்குடி இல்லாத சிவனின் நேரடி வாரிசு எனச் சொல்லப்படும் லேமூரியங்களைப் போல
இல்லாமலும் எதோ வித்தியாசமான உருவமாக மாற்றி அடர்ந்தக் காட்டினில் என்னை விட்டு
விட்டார்களே படுபாவிகள் என்று திட்டிக் கொண்டிருக்கும் போது,
அலைபேசி அதிர்ந்து எனது கனவையும்,
தூக்கத்தையும் கலைத்தது.
அலைபேசியில்,"என்னாத் தம்பி மேன்சன் கீழே பூட்டிருக்கு வந்து கதவத் திற நான்
வந்துட்டேன்." என அண்ணன் Elango Rajarathinam அழைக்க.கடிகாரத்தைப் பார்த்தேன் மணி ஐந்து.
”போச்சிடா இன்னைக்குத் தூக்கம்”என்று யோசித்த வாறே அறையைக் கீழே சென்று திறந்தேன்.
இருவரும் அறைக்கு வந்து சிறிதுப்
பேசிவிட்டு,மீண்டும் படுக்கைக்குச் சென்ற போது “சிறிது
நாட்களுக்கு முன்பு வரை கனவில் வரும்
முன்னால் காதலிகள்,நடிகைகள்,முகம் தெரியாத எனது எதிர்காலக் காதலி,உலகின் அற்புதங்களானக் குட்டிக் குழந்தைகள் போன்ற யாருமே வரவிலையே?”
என்ற கேள்வி எழ.
முத்திற் வயதின் முதல் வயதில் கிளுக் கிளுப்பான கனவுகள் மட்டும்தான் வர
வேண்டுமா என்ன?,என்று எனக்கு நானே சமாதான பதில்
சொல்லிக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் அலாரம் அடிக்க எழுந்து
தினசரி வேலையைத் துவங்க வேண்டியிருந்தது.எனக்கு ஏன் அது போன்ற கனவுகள் வரத்
துவங்கிருக்கின்றன.
"ஒரு வேலை வயது முப்பது
ஆகிவிட்டதன் துவக்கமா?" என்று யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.
#இனியன்